Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பகத் பாசில் அசால்ட்டாக கண்ணுலேயே நடிச்சுட்டு போயிருவாரு... நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான் ரசிகர்கள் கொண்டாட பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் ஆன்லைன் நேர்காணலில் பகத் பாசில் அசால்ட்டா கண்ணுலயே நடிச்சுட்டு போயிருவாரு என சிவகார்த்திகேயன் வியந்து பாராட்டியுள்ளார்.
40
பேருக்கு
கொரோனா..
ஹாட்ஸ்பாட்டாக
மாறியதா
கரண்
ஜோஹர்
பர்த்டே
பார்ட்டி..
அவர்
என்ன
சொல்றாரு?

வசூல் சாதனை
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு இணையாக தன்னுடைய ஒவ்வொரு படங்களும் வசூல் சாதனை செய்து வருகிறார். முன்னணி இயக்குநருடன் மட்டுமல்லாமல் அறிமுக இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த திரைப்படம் டான். இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி டான் படத்தை முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் இயக்கி இருப்பார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருப்பார் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்க இந்த படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து அனைவரையும் மீண்டும் ரசிக்க வைத்திருப்பார்கள்.

அழுத்தமான பாசத்தை
டான் திரைப்படம் கலகலப்பான கல்லூரி காலத்தில் வெளியாகி இருந்தாலும் மற்றொருபுறம் மகனுக்கும் தந்தைக்கும் சொல்லப்படாத அழுத்தமான பாசத்தை மிகத் தெளிவாக கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி, ராதாரவி, பாலசரவணன், முனிஸ்காந்த், காளி வெங்கட், விஜய் என பலர் இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். டான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இப்பொழுது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு பிரின்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது

அசால்ட்டாக கண்ணுலேயே நடிச்சுட்டு போயிருவாரு
சமீப காலமாகவே பல படங்கள் பான் இந்தியா படங்களாக அனைத்தும் மொழிகளிலும் வெளியாவதால் பல மொழி நடிகர்கள் அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்து உள்ளார்கள். அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தனது வியக்கத்தக்க நடிப்பின் மூலம் மலையாளத்தில் எண்ணற்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பகத் பாசில் தமிழ் சினிமாவிற்கு வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து புஷ்பா,விக்ரம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆன்லைன் நேர்காணலில் பேசுகையில் பகத் பாசில் நடிக்க பெருசா கெட்டப் எல்லாம் போட மாட்டார். அசால்டா கண் எக்ஸ்பிரஸன்லயே நடிச்சி மிரட்டிட்டு போயிடுவாரு அதெல்லாம் எனக்கு சுத்தமா வராது. நான் ரசிக்கும் மற்றொரு நடிகர் பகத் பாசில். என சிவகார்த்திகேயன் வியந்து பாராட்டியுள்ளார்.
-
“புத்தம் புது இசை மலரை அறிமுகப்படுத்துகிறேன்”: ரோஜா 30ஆண்டுகள், ரஹ்மானுக்கு கிடைத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
-
2021ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. கர்ணன், டாக்டர், மாஸ்டர்.. சைமாவில் மாஸ் காட்டும் தமிழ் படங்கள்!
-
சூர்யா 42 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா.. ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்!