நடிகரின் கண்ணீர் கதை: அஸ்தமனமான திரைவாழ்க்கை.. தவறான முடிவால் மொத்தமும் போச்சு!
சென்னை: தமிழ் சினிமா திரையுலகை பொருத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே, எத்தனையோ மூத்த நடிகர்கள் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு புகழின் உச்சத்தில் இருந்தாலும் கூட, அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எடுத்த தவறான முடிவால் அவர்களின் திரையுலக பயணமே ஒட்டுமொத்தமாக பாதித்து விடுகிறது. அதுபோல தவறான முடிவால் எத்தனையோ திரைப்பிரபலங்கள் காணாமலே போயிருக்கிறார்கள். பல வெற்றிப்படத்தை கொடுத்து எம்.ஜி.ஆர், சிவாஜி இணையாக ரசிகர்களை வைத்து இருந்த ஜெய் சங்கர் எடுத்த தவறான முடிவால், அவரின் திரை
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மிகப் பெரிய ஆளுமைகளுக்கு நடுவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி, மக்கள் விரும்பும் நடிகராகவே வலம் வந்தவர் தான் ஜெய் சங்கர். அந்த காலத்தில் இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் கொண்டாடும் நடிகராக இருந்தார் ஜெய் சங்கர். பல ஜாம்பவான்கள் இருந்த போதும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இவரின் திரைப்படம் வெளியாகி கொண்டு இருந்தன. இதனால், இவரை ரசிகர்கள் வெள்ளிக்கிழமை நாயகன் என்று அழைத்தார்கள். அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து, பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த ஜெய் சங்கர், தான் எடுத்த தவறான முடிவால், அவரின் திரைப்பயணமே அஸ்தமித்துள்ளது. அதுபற்றி ஜெய் சங்கரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிகர் ஜெய் சங்கர்: 60 காலகட்டத்தில் அறிமுகமான ஜெய் சங்கருக்கு, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு இருந்தது போன்ற தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஜெய் சங்கர் கதாநாயகனாக எந்த அளவுக்கு திரைப்படங்களில் நடித்தாரோ, அதேபோல பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். பல ஆண்டுகளாகவே கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருந்த ஜெய் சங்கர், ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகராக மாறினார். ரஜினிகாந்துக்கு திருப்புமொழியை ஏற்படுத்தி முரட்டுக்காளை திரைப்படம் ஜெய் சங்கருக்கு வேறு விதமான பாதையை காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
தவறான முடிவு: முரட்டுக்காளை திரைப்படத்திற்கு பிறகு ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் தோல்வி அடைந்தன. வில்லனாக நடித்த ஜெய் சங்கரை ரசிகர்கள் மீண்டும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதை புரிந்து கொண்ட நடிகர் ஜெய் சங்கர் அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வில்லன் நடிகராகவே பரிமாணம் எடுத்தார். ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக கொண்டாடப்பட்ட ஜெய்சங்கர், தான் எடுத்த தவறான முடிவால், ஹீரோ என்ற அடையாளத்தை மறந்து வில்லன் நடிகராக மாறிவிட்டார். இதே ஜெயசங்கர் தான் தளபதி திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருந்தார்.
மிகப்பெரிய தவறு: தான் எடுத்த தவறான முடிவு பற்றி ஜெய்சங்கர் பத்திரிகை ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார். நான் என்று வில்லனாக நடித்தேனோ, அன்றே என்னுடைய திரை உலக பயணம் மாறிவிட்டது என்பதை நான் உணர்ந்து விட்டேன். ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடித்து விட்டால், அடுத்தடுத்த படங்களில் அந்த நடிகரை மக்கள் வில்லனாக தான் பார்ப்பார்கள். இதனால், நானும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் மாறிவிட்டேன். அந்த நேரத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு அது என்று அந்த பேட்டியில் ஜெய் சங்கர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











