Director K Balachandar: தந்தைக்கு நிகரானவர்.. கே பாலசந்தர் நினைவு தினத்தில் கமல் உருக்கம்!

சென்னை: இயக்குநர் சிகரம் என்ற பாராட்டிற்குரியவர் கே பாலசந்தர். நாடகங்களின் மூலம் சினிமாவிற்கு வந்தவர்களில் முக்கியமானவர் இவர்.

எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்திற்கு கதை, வசனம் எழுதியதில் இருந்து இவரது சினிமா பயணம் துவங்கியது. தொடர்ந்து ரஜினி, கமல் போன்றவர்களின் ஆசானாகவும் இருந்தார்.

Actor Kamal haasan tweets about K Balachandar on his memorial day

அபூர்வ ராகங்கள் படம்மூலம் சூப்பர்ஸ்டாரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை கே பாலசந்தருக்கு உண்டு.

இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்: இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் நினைவு தினம் இன்று. நாடகங்கள் மூலம் சினிமாவிற்கு வந்தவர்களில் முக்கியமானவராக இருந்தவர் கே பாலசந்தர். எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்திற்கு கதை, வசனம் எழுதியதன்மூலம் தன்னுடைய திரைப்பயத்தை துவங்கிய கே பாலசந்தர், தொடர்ந்து ரஜினி, கமல், நாகேஷ், ஜெமினி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்பயணத்தை மிகவும் சிறப்பாக்கியவர். மேஜர் சுந்தர்ராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழியை ஏற்படுத்தியது இவரது மேஜர் சந்திரகாந்த்.

தனிப்பட்ட ரசிகர்கள்: தன்னுடைய படங்களின்மூலம் தனக்கான தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார் கே பாலசந்தர். நடிகர்களுக்காக படங்களை பார்த்த காலகட்டத்தில் இயக்குநர்களுக்காக படங்களை பார்க்கும் சூழலை ஏற்படுத்திய கே பாலசந்தர், நாகேஷை அதிகமாக வைத்து படங்களை கொடுத்தார். நீர்க்குமிழி, நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல் என நாகேஷின் கேரியர் பெஸ்ட் படங்களை கொடுத்தவர் கே பாலசந்தர். இவரது கதை வசனத்தில் உருவானது சர்வர் சுந்தரம். படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். ஆயினும் படத்தில் கே பாலசந்தரின் ஸ்டைல்தான் பிரதானமாக அமைந்தது.

குடும்ப கதைகளுக்கு முக்கியத்துவம்: நடிகர்களுக்கு மட்டுமில்லாமல் நடிகைகள் வாணிஸ்ரீ, ஜெயந்தி, ராஜஸ்ரீ, சரோஜாதேவி போன்றவர்களுக்கும் மிகவும் அழுத்தமான கேரக்டர்களை கொடுத்து இன்றளவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். காமெடி, த்ரில்லர் மற்றும் குடும்ப கதைக்களங்களை அதிகமாக தன்னுடைய படங்களில் பயன்படுத்திய கே பாலசந்தர், அரங்கேற்றம், பூவா தலையா, அபூர்வ ராகங்கள், மூன்று முடீச்சு, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி, சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற படங்களில் பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைக்களங்களை உருவாக்கினார்.

ரஜினி, கமலின் கேரியர் பெஸ்ட் படங்கள்: நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்தின் கேரியர் பெஸ்ட் படங்களை கொடுத்துள்ளார் கே பாலசந்தர். கமலுடன் மட்டுமே 27 படங்களை மேல் கொடுத்துள்ளார். இன்றைய தினம் அவரது 9வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கே பாலசந்தரை நினைவு கூர்ந்துள்ளார். அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர் என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எத்தனையோ நடிப்புக் கலைஞர்களை திரைக்கு தந்த திண்மையாளர் என்றும் பாராட்டியுள்ளார்.

தந்தைக்கு நிகரானவர்: தொடர்ந்து தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளை கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் என்றும் குறிப்பிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், அவரது நினைவு நாளான இன்று என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுவதாகவும் தெரிவித்துள்ளார். பல படங்களில் சிறிய காட்சிகளில் தோன்றியுள்ள கே பாலசந்தர் நடிகர் கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படம் தன்னுடைய கேரியரில் மிகச்சிறந்த படம் என முன்னதாக பேட்டியொன்றில் கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X