twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆறிலிருந்து அறுபது வரை.. பத்மஸ்ரீ கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தின் சுவாரசியங்கள் ஓர் பார்வை!

    |

    Recommended Video

    Kamal Hassan:60 Shades of Kamal| Filmibeat Tamil

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் கால்பதித்து 60 ஆண்டுகள் கடந்தோடிய நிலையில் அவர் கடந்த வந்த பாதையின் சில சுவாரசிய தகவல்களை காணலாம்.

    நடிகர் கமல்ஹாசன், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை பூர்விகமாக கொண்டவர். இவரது பெற்றோர் சீனிவாசன்- ராஜலட்சுமி. தந்தை சீனிவாசன் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

    கடைக்குட்டியான கமல்ஹாசனுக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா. அண்ணன்களான சாருஹாசன் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரும் தந்தையை போல் வழக்கறிஞர்கள். சகோதரி நளினி பரதநாட்டிய கலைஞர் ஆவார்.

    மருத்துவரால் வந்த வாய்ப்பு

    மருத்துவரால் வந்த வாய்ப்பு

    சகோதரர்களின் உயர்கல்விக்காக கமலின் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. அப்போது தனது தாயாருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

    களத்தூர் கண்ணம்மா வாய்ப்பு

    களத்தூர் கண்ணம்மா வாய்ப்பு

    அப்போது ஒரு முறை சிகிச்சையளிப்பதற்காக அவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரின் வீட்டிற்கு சென்றபோது கமலையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கமலின் சுட்டித்தனத்தை பார்த்த மெய்யப்ப செட்டியாரின் மகன் சரவணன் தங்கள் நிறுவனமான ஏவிஎம்மின் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க வைத்தார்.

    1960ஆம் ஆண்டு

    1960ஆம் ஆண்டு

    களத்தூர் கண்ணம்மா திரைப்படம் 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து, பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை. கண்ணும் கரளும், வானம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் கண்ணும் கரளும் மலையாள மொழி படமாகும்.

    அப்போதே தேசிய விருது

    அப்போதே தேசிய விருது

    இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்டத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார் கமல்.

    பல மொழிகளில்

    பல மொழிகளில்

    நடிகர் கமல்ஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுதியிருக்கிறார் கமல்ஹாசன்.

    பல முகங்களை கொண்டவர்

    பல முகங்களை கொண்டவர்

    நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமின்றி திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி பல படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் கமல்ஹாசன்.

    மத்திய அரசு கவுரவிப்பு

    மத்திய அரசு கவுரவிப்பு

    மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் கமல். நடிகர் கமல்ஹாசன் மொத்தம் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் சினிமாத்துறையில் அவர் ஆற்யி பணிக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளது. 2016 இல் செவாலியே விருது பெற்றார் கமல்ஹாசன்.

    பல மொழி வித்தகர்

    பல மொழி வித்தகர்

    நடிகர் கமல்ஹாசன் சிறந்த மொழிப்புலமை பெற்றவர். தமிழகத்தில் பேசப்படும் சென்னை தமிழ் முதல் கொங்கு தமிழ் வரை அத்தனை தமிழையும் அசால்ட்டாக பேசி ஆச்சரியப்படச் செய்வார். அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பெரும்பாலான இந்திய மொழிகளை பேச வல்லவர்.

    எண்ண முடியாது

    எண்ண முடியாது

    கமல்ஹாசன் நடிப்பில் இதுதான் சிறந்தது என எண்ணமுடியாத அளவுக்கு பல படங்களை கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். நாயகன், குணா, அபூர்வ சகோதர்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, மகாநதி, அன்பே சிவம், தசாவதாரம், விருமாண்டி, சலங்கை ஒலி, தேவர் மகன், வாழ்வேமாயம், சகலகலா வல்லவன், மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, சிவப்பு ரோஜாக்கள், அவ்வை சண்முகி, உன்னால் முடியும் தம்பி, இந்தியன், ஹேராம், தெனாலி, புன்னகை மன்னன், ஆளவந்தான், நம்மவர், பாபநாசம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்கள் சட்டென நினைவுக்கு வருபவை.

    இந்தியன் 2 மீண்டும்

    இந்தியன் 2 மீண்டும்

    தற்போது திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல் இந்நன்னாளில் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியிருக்கார். கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படம் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

    பெருமை கொள்கிறது தமிழகம்

    பெருமை கொள்கிறது தமிழகம்

    நடிகர் கமல்ஹாசன் ஆண்டவர், நம்மவர் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் சினிமாத்துறையின் 60 ஆண்டு சாதனைகளை ஒரே நாளில் சொல்வதென்பது முடியாத ஒன்று. 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளை சினிமாத்துறைக்காக அர்பணித்த மிக குறைந்த மனிதர்களில் கமலும் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறது தமிழகம்.

    English summary
    Actor Kamal hassan complets his 60 years in cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X