கரகாட்டக்காரன் ஹிட் கொடுத்த கங்கை அமரன் இயக்கத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்..

சென்னை: நடிகர் ராமராஜன் தற்சமயம் சாமானியன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதில் இயக்குநர் கங்கை அமரன் தன்னை வைத்து மீண்டும் இயக்க ஆசைப்பட்ட திரைப்படத்தை வேண்டாம் என்று தான் கூறிய சம்பவத்தை ராமராஜன் பகிர்ந்துள்ளார்.

சாமானியன்

சாமானியன்

நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கொள்கையுடன் வாழும் ராமராஜன் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் தான் சாமானியன். அவருடன் இணைந்து நடிகர் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ஷூட் செய்து வெளியிடப்பட்டு படத்தின் துவக்க விழாவும் நடைபெற்றது.

கனகா வரவில்லை

கனகா வரவில்லை

அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கனகாவையும் அழைத்துள்ளார் ராமராஜன். ஆனால் கடைசி நிமிடத்தில் கனகா வரவில்லையாம் காரணம் கரகாட்டக்காரன் படத்தில் வில்லனாக நடித்த சந்தன பாரதி அந்த விழாவிற்கு வருவதாக சொன்னதால் கனகா வரவில்லை என்று ராமராஜன் பேசியிருந்தார்.

மிஷ்கின் முதல் மில்டன் வரை

மிஷ்கின் முதல் மில்டன் வரை

இப்போதுள்ள முன்னணி இயக்குநர்கள் கூட ராமராஜனை வைத்து படம் செய்ய முயற்சிகள் எடுத்துள்ளனர். குறிப்பாக உதயநிதிக்காக தான் பிரத்யேகமாக எழுதிய யுத்தம் செய் திரைப்படத்தை உதயநிதி வேண்டாம் என்று சொன்னதால் தனது தயாரிப்பாளரிடம் ராமராஜன் அல்லது சேரனை கதாநாயகனாக நடிக்க வைக்கிறேன் என்று மிஷ்கின் கூறியிருக்கிறார். அப்போது தயாரிப்பாளர் தரப்பு சேரனை தேர்ந்தெடுத்தார்களாம். சேரனுடைய கரியரில் அந்தப் படம் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை ராமராஜன் நடித்திருந்தாலும் வித்யாசமாக அமைந்திருக்க கூடும். இதே போல கோலிசோடா, கடுகு போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் விஜய் மில்டன் அவர்களும் ராமராஜனை நடிக்க கேட்டுள்ளார். ஆனால் படத்தின் தலைப்பு கோடீஸ்வரன் என்று இருந்ததால் நடிக்க மறுத்து விட்டாராம்.

கங்கை அமரன் படம்

கங்கை அமரன் படம்

ராமராஜன் படங்களில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே வசூல் ரீதியாக சாதனை படைத்த படம் என்று கரகாட்டக்காரன் திரைப்படத்தை சொல்லலாம். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் அந்தப் படம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் ஒவ்வொரு படத்திற்கும் இரண்டாம் பாகங்கள் எடுக்கக்கூடிய டிரெண்ட் இப்போது இருப்பதால் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என்று கங்கை அமரன் ராமராஜனிடம் கேட்டாராம். ஆனால் இந்த பார்ட் டூ கதையே வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் ராமராஜன். கனகாவிடம் நான் பேசுகிறேன் என்று கங்கை அமரன் கூறிய போது கூட நீங்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் எடுங்கள் நான் அதில் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம் ராமராஜன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X