Exclusive - தலையில் அடி.. அஜித் எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான்.. பிரபல நடிகரின் ஷேரிங்ஸ்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக பலத்த அடியை வாங்கியது. அதிலும் விடாமுயற்சி திரைப்படம் வசூல் ரீதியாகவும் சொல்லிக்கொள்ளும்படியெல்லாம் இல்லை. இப்போது கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித்குமார் அடுத்ததாகவும் குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக தெரிகிறது.
ஹெச்.வினோத்துடன் வரிசையாக மூன்று படங்கள் பணியாற்றிய அஜித்; மகிழ் திருமேனியுடன் இணைந்தபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் விடாமுயற்சி திரைப்படத்தின் மீது விழுந்தன. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. படம் எவ்வளவு டேமேஜாக இருந்தாலும் அஜித்துக்கு ஓபனிங் மாஸாக கிடைக்கும் என்ற கருத்துதான் இத்தனை காலம் நிலவியது. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தால் அந்தக் கருத்தும் உடைந்துவிட்டது. வசூல் ரீதியாகவும் படம் பெரிதாக போகவில்லை.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்தார். சரி இந்தப் படமாவது தங்களுக்கு திருப்தியை கொடுக்கும் என்று ஆவலோடு சென்ற ஏகே ரசிகர்களுக்கு பெரிதாக ஏமாற்றம் இல்லைதான். ஏகப்பட்ட சீன்களை அவர்கள் ரசித்தார்கள். அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் துளிகூட திருப்தியை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ரீல்ஸ்களின் தொகுப்பு: படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தன. படமா இல்லை இது ரிலீஸ்களின் தொகுப்பா என்ற சந்தேகத்தையும் பலர் எழுப்பினார்கள். படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக திரைத்துறையில் இப்போது பேச்சுக்கள் ஓடுகின்றன.
அஜித் பற்றி மற்ற நடிகர்கள்: இதற்கிடையே அஜித் இப்போது சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருந்தாலும் தான் வளர்ந்துவந்த காலத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள் மீது அக்கறையோடே இருந்தார். இப்போதும் அப்படியே இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்காவது சின்ன அடி பட்டால்கூட இவர் அக்கறையோடு நலம் விசாரித்து; தேவையான உதவிகளையும் செய்வார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் தொடர்ந்து சொல்வதுண்டு.
சம்பத் ராம் பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகரான சம்பத் ராம் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "தீனா படத்தின் ஷூட்டிங்கின்போது கம்பெனி ஆளுங்க யாருக்கெல்லாம் ஃபைட் தெரியும் என்று சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் கேட்டார். நான் உடனே கையை தூக்கிவிட்டேன். சரி சண்டை காட்சிதானே நடித்துவிடலாம் என்று இருந்தேன். ரிகர்சல் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தேன்.
தலையில் அடி; அஜித் அட்வைஸ்: அஜித்துடன் நான் சண்டை போடும்படியான காட்சியை எடுத்தார்கள். அதில் அவர் என்னை அடிப்பது போன்றும் நான் கீழே விழுவது போன்றும் இருந்தது. அதன்படியே செய்தேன். ஆனால் நான் கீழே விழுந்தபோது எனது தலை ரோட்டில் பலமாக பட்டுவிட்டது. உடனே அதனை கவனித்த அஜித் என்னிடம் என்ன ஆச்சு? பிரச்னை எதுவும் இல்லையே என்று கேட்டுவிட்டு; உங்களுக்கு ஃபைட் தெரியுமா என்றும் கேட்டுவிட்டார். நான் உடனே இல்லை சார் தெரியாது என்று சொல்ல; அவரோ, 'பாஸ் உடனே சண்டை பயிற்சி எடுங்கள்' என்று அட்வைஸ் செய்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











