twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடவுளுக்கும் சரித்திர ஹீரோகளுக்கும் உருவம் கொடுத்த ஒப்பற்ற கலைஞன்... சிவாஜி கணேசனின் சிறந்த படங்கள்!

    |

    சென்னை: சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த படங்களில் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படங்கள் குறித்த தொகுப்பை காணலாம்.

    Recommended Video

    Sivaji Ganesan 93rd Birth Anniversary | MK Stalin | Sivaji Ganesan Memorial

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்கள், ஹிந்தி மொழி திரைப்படங்கள் மற்றும் மலையாள படம் என நான்கு மொழிகளில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன்.

    நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் பிறந்த நாள்… டூடுல் வெளியிட்டு கௌரவித்த கூகுள்!நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் பிறந்த நாள்… டூடுல் வெளியிட்டு கௌரவித்த கூகுள்!

    பராசக்தி

    பராசக்தி

    இந்நிலையில் அவர் நடித்த படங்களில் இருந்து மக்கள் மனதில் என்றும் நீங்காத 10 படங்கள் குறித்து காணலாம். நடிகர் சிவாஜி கணேசன், 1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை பஞ்சு கிருஷ்ணன் இயக்கியிருந்தார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஓடினேன் ஓடினேன் என்ற நீதிமன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் இன்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    வீர பாண்டிய கட்டபொம்மன்

    வீர பாண்டிய கட்டபொம்மன்

    நடிகர் சிவாஜி கணேசன் கடவுள்களுக்கும் வரலாற்று நாயகர்களுக்கும் உருவம் கொடுத்தவர். பார்த்திராத கடவுள்களையும் பார்க்க முடியாமல் போன பல வரலாற்று ஹீரோக்களுக்கும் உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன். வீர பாண்டிய கட்டபொம்மன் இப்படிதான் இருப்பார் என்று மக்கள் நம்பக்கூடிய வகையில் சிறப்பான நடிப்பையும் உடல் மொழியையும் வெளிப்படுத்தி வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டியவர் சிவாஜி கணேசன். 1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிவாஜி கணேசன் பேசும் வசனம் இன்றும் மக்களால் மறக்கமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    பாசமலர் படம்

    பாசமலர் படம்

    இதேபோல் 1961ஆம் ஆண்டு வெளியான படம் பாசமலர். இதில் பீம் சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அண்ணன் தங்கைகளாக போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இன்று வரையிலும் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் படம் அப்போது சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாசமலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்ணன் திரைப்படம்

    கர்ணன் திரைப்படம்

    நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தில் கர்ணன் கதாப்பாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். கிருஷ்ணராக என்டிஆர், துரியோதனனாக அசோகன், துரியோதனனின் மனைவி பானுமதியாக சாவித்திரி, அர்ஜுனனாக முத்துராமன் என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. துரியோதனனின் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பராகவும் வாரி வழங்கும் வள்ளலாக கர்ணன் கேரக்கடரில் பட்டையை கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன்.

    கப்பலோட்டிய தமிழன்

    கப்பலோட்டிய தமிழன்

    இதேபோல் கப்பலோட்டிய தமிழன் இப்படிதான் இருப்பார் என்று அவரை காணாத தலைமுறைக்கு வாழ்ந்து காட்டியவர் சிவாஜி கணேசன். 1961 ஆம் ஆண்டு வெளியான கப்பலோட்டிய தமிழன் படத்தை பி ஆர் பந்துலு இயக்கி இருந்தார். இதில் வஉ சிதம்பரம் பிள்ளையாக வாழ்ந்து காட்டியிருந்தார் சிவாஜி கணேசன். கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் அப்போதே சிறந்த தமிழ் மொழி படத்திற்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    நவராத்திரி திரைப்படம்

    நவராத்திரி திரைப்படம்

    சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளியான படம் நவராத்திரி. இந்த படம் சிவாஜி கணேசனின் 100வது படமாகும். இப்படத்தை ஏபி நாகராஜன் இயக்கி தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் 9 வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தில்லானா மோகனாம்பாள்

    தில்லானா மோகனாம்பாள்

    சிவாஜி கணேசன் நடிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளியான படம் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தில் நாதஸ்வர வித்வானாக சிக்கல் ஷண்முக சுந்தரம் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சிவாஜி கணேசன். நாதஸ்வரம் வாசிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் நிஜ வித்வான்களையே தூக்கி சாப்பிட்டிருப்பார் சிவாஜி கணேசன். அவருக்கு ஜோடியாக மோகனாம்பாள் கதாப்பாத்திரத்தில் நாட்டிய பேரொளி பத்மினியும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

    ராஜபார்ட் ரங்கதுரை

    ராஜபார்ட் ரங்கதுரை

    சிவாஜி கணேசன் நடிப்பில் 1973 ஆம் ஆண்டு வெளியான படம் ராஜபார்ட் ரங்கதுரை. பி மாதவன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றும் பலரால் ரசிக்கப்படும் குடும்பச் சித்திரமாக உள்ளது. இதில் உடன் பிறந்தவரால் நிந்திக்கப்படும் இடத்திலும் சரி ராஜபார்ட் ரங்கதுரையாக மேடையில் நடிக்கும் போதும் சரி நடிகர் சிவாஜி கணேசன் கலங்க வைத்திருப்பார். குறிப்பாக ஜின்ஜினுக்கா சின்னக்கிளி பாடலில் சிவாஜி காட்டும் எக்ஸ்பிரஷன்கள் இன்றும் நம்மை அறியாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும்.

    முதல் மரியாதை திரைப்படம்

    முதல் மரியாதை திரைப்படம்

    சிவாஜி கணேசன் நடிப்பில் 1985ஆம் ஆண்டு வெளியான படம் முதல் மரியாதை. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் திருமண வாழ்க்கையின் சோகத்தையும் தோல்வியையும் மறைத்து வெளியில் சிரிக்கும் கிராமத் தலைவராக மலைச்சாமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சிவாஜி கணேசன். மேலும் தன்னை விட வயது குறைந்த பெண்ணின் மீது காதல் கொண்டும் அதனை வெளிப்படுத்தாத மூத்த மனிதராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மிலும் வாழ்ந்திருப்பார். இன்றும் பலரின் ஃபேவரைட் நம்பர்களில் ஒன்றாக இப்படம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    English summary
    Actor Sivaji Ganesan's top 10 movies on his birthday. Sivaji Ganesan's 93rd birth day celebrates today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X