இயக்குநர் சங்கர் வீடுன்னு நினைச்சிட்டு போய் மொக்கை வாங்கிய சூரி.. சுவாரசிய தகவல்!

சென்னை: வெள்ளந்தியான நடிப்பின் மூலமும் வெகுளித்தனமான பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக உள்ளார் நடிகர் சூரி

இதுவரை காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சூரி முதல் முறையாக ஹீரோவாக விடுதலை என்ற படத்தில் நடித்துள்ளார்

இந்த நிலையில் படவிழா மேடையில் பேசிய சூரி சங்கர் வீடு என நினைத்துக் கொண்டு போய் மொக்கை வாங்கிய சுவாரசிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

 வெண்ணிலா கபடி குழு

வெண்ணிலா கபடி குழு

நடிகர் சூரியின் காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது மதுரை மண் மனம் மாறாத வெள்ளந்தியான பேச்சு வெகுளித்தனமான காமெடி என தமிழ் சினிமாவில் பல திரைப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சூரிக்கு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்ததன் பிறகு பல வருடங்களாக பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வந்தார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமெடி அந்த படத்தில் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்க அன்று முதல் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் சூரி பணியாற்றி வருகிறார் அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, மான் கராத்தே நம்ம வீட்டு பிள்ளை மற்றும் சமீபத்தில் வெளியான டான் முதற்கொண்டு சூரி சிவகார்த்திகேயன் காமெடி காம்போ இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 ஹீரோவாக

ஹீரோவாக

இதுவரை காமெடியனாக மட்டும் வலம் வந்து கொண்டிருந்த சூரி ஹீரோவாகவும் களமிறங்கியுள்ள திரைப்படம் விடுதலை. அசுரன் என்ற பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் முழுக்க முழுக்க சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஜீவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

 சங்கர் வீடுன்னு நினைச்சிட்டு போய்

சங்கர் வீடுன்னு நினைச்சிட்டு போய்

இவ்வாறு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த மிகசிறந்த நகைச்சுவை நடிகராக உள்ள சூரி ஆரம்ப காலகட்டத்தில் நடிப்புக்காக வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இயக்குநர் சங்கரை எப்படியாவது நேரில் பார்த்து வாய்ப்பை பெற வேண்டும் என்ற ஆசையில் நடிகர் அப்புகுட்டியை கூட்டிக்கொண்டு சங்கர் வீட்டை தேடி கொண்டே சென்றார்களாம்

 மொக்கை வாங்கிய சூரி

மொக்கை வாங்கிய சூரி

அப்பொழுது தென்பட்ட ஒரு பிரமாண்ட வீட்டை கண்டு இதுதான் சங்கர் வீடு என நினைத்துக்கொண்டு அங்கிருந்த செக்யூரிட்டி நாயையும் தாண்டி கொண்டு உள்ளே சென்ற போது , அங்கு பணிப்பெண்ணை பார்த்து இது சங்கர் வீடு தானா ? என கேட்டுள்ளார் . அவர் இல்லை இது நகைக் கடைக்காரர் வீடு, மார்வாடி வீடு என கூறினாராம். இவ்வாறு பிரமாண்ட வீட்டை பார்த்து சங்கர் வீடு என நினைத்து மார்வாடி வீட்டுக்குள் சென்று மொக்கை வாங்கிய சுவாரசிய அனுபவத்தை பட விழா மேடை ஒன்றில் சூரி பகிர்ந்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X