twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் மாற்றம் தந்த...5 முக்கிய திரைப்படங்கள் !

    |

    சென்னை : திரையுலக வாழ்க்கையில் அனைத்து நடிகர்களும் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருப்பார்கள். பல தோல்விகளைத் தாண்டி முட்டிமோதி, தன்னைத்தானே செதுக்கி இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார் நடிகர் சூர்யா.

    காதல் வசனம் பேசும், வெறும் காதல் நாயகன் மட்டுமல்ல, மிரட்டும் கதாபாத்திரத்தையும் அசால்டாக தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

    இவரின் திரைத்துறை வாழ்க்கையை மாற்றிய முதல் 5 முக்கியமான படங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

    சுஷாந்தை சுற்றிய காதல்கள்.. காதல் முறிவுகள்.. கிசுகிசுக்கள்.. மரணத்தை தொடர்ந்து வைரலாகும் போட்டோஸ்! சுஷாந்தை சுற்றிய காதல்கள்.. காதல் முறிவுகள்.. கிசுகிசுக்கள்.. மரணத்தை தொடர்ந்து வைரலாகும் போட்டோஸ்!

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    1997ஆம் ஆண்டு நேருக்குநேர் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் அடுத்து வந்த படங்கள் எதுவுமே சரிவர ஓடாமல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இப்படி பல சரிவுகளை தாண்டி இவரின் திரைத்துறை வாழ்க்கை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வேளையில் திருப்புமுனையாக அமைந்த முதல் ஐந்து படங்கள்.

    பாடி லாங்குவேஜ்

    பாடி லாங்குவேஜ்

    2001ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா இணைந்து நடித்த முதல் படமான நந்தா. இந்த படம் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த இவர், ஒரு ராவான கேங் ஸ்டர் படத்தில் ராஜ்கிரண் உடன் இறங்கி மிரட்டியிருப்பார். மேலும் இந்த படத்தில் மிரட்டும் சண்டை காட்சிகள் மட்டுமல்லாமல் தாய் பாசத்தையும் மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் இவரது திரை வாழ்வில் ஏற்படுத்திய முதல் திருப்புமுனையாகும்.

    கட்டுடல் போலீஸ்

    கட்டுடல் போலீஸ்

    நந்தாவில் அடி ஆள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு அடுத்த ஒரு மாஸ் அண்ட் ஸ்டைலிஷ் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது 2003ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க. கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து நடித்த இந்தப் படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மற்றும் ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக அமைந்தது. மேலும் இந்த படத்தில் இவர் கட்டுடலுடன் போலீஸ் அதிகாரியாக வந்து பெண்களின் மனதை கொள்ளையடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இவர் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடித்ததால் அப்போது இவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் வந்தது.

    பாலாவுடன் மீண்டும் இணைந்தார்

    பாலாவுடன் மீண்டும் இணைந்தார்

    இயக்குனர் பாலா மீண்டும் சூர்யா மற்றும் விக்ரமுடன் இணையும் இரண்டாவதாக படமாக 2003ஆம் ஆண்டு வெளிவந்தது பிதாமகன். இந்த படத்திற்காக சூர்யாவும் விக்ரமும் பல விருதுகளை வென்றனர். எப்போதும் தனது படங்களில் மிரட்டி வரும் பாலா இதில் ஒரு படி மேலே போய் மிரட்டலில் மாஸ் உச்சத்தை காட்டி இருவரின் நடிப்பிற்கும் நல்ல தீனி போட்டு இருப்பார். பொதுவாக ஒரு படத்தில் நடித்த ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் சிறந்த கதாபாத்திரத்திற்காக விருது வழங்கி வந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பல விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் தேசிய விருதினை பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் சூர்யா, சங்கீதா, லைலா, என இவர்கள் அனைவரும் பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர்ஸ் கேட்டகரியில் பல விருதுகளை வென்றனர். இயக்குநர் பாலாவுக்கும் இது சிறந்த இயக்குனருக்கான விருதை மீண்டும் ஒருமுறை பெற்றுத்தந்தது. இவ்வாறு பல விருதுகளை அள்ளி குவித்த இந்த படம் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    வித்தியாசமான கதாபாத்திரம்

    வித்தியாசமான கதாபாத்திரம்

    நடிப்பில் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வந்த சூர்யா. 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகம் வரை எட்டிப் பார்த்தார். சற்றும் எதிர்பார்க்காத கதைக்களத்தில் தமிழ் திரையுலகில் யாரும் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் ஷார்ட் டைம் மெமரி லாஸ் என்ற ஒரு கான்செப்டை வைத்துக்கொண்டு, உடம்பெல்லாம் முக்கியமான குறிப்புகளை பச்சைகுத்திய படி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை மிக நேர்த்தியாக எடுத்திருந்தார். இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியானது முதல், நாளுக்கு நாள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே இருந்தது. சூர்யா, அசின், நயன்தாரா என முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் சூர்யாவின் ஆக்டிங் கெரியரிலும் இது யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை படமாக அமைந்தது.

    அப்பா மகன் பாசம்

    அப்பா மகன் பாசம்

    அப்பா மகன் உறவு எவ்வளவு நெடுந்தூரமானது என மிக அழகாக வர்ணித்த படம் வாரணம் ஆயிரம். 2008ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சூர்யா மீண்டும் இணைந்த இந்த படம் சூர்யாவின் கெரியரில் இது ஒரு பெஞ்ச் மார்க் என சொல்லலாம். மகனின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பா உடனிருந்து எவ்வாறெல்லாம் வழிகாட்டுகிறார் என ஒரு தந்தையின் அறியப்படாத கோணத்தை காட்டியிருந்த இந்த படம் அப்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது. சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட நடிகர்களின் ரசிகர்களும் இந்த படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடினர். மேலும் தமிழ் ரசிகர்களிடையே சிக்ஸ்பேக் என்ற ஒன்றை இந்த படத்தில் முதல் முதலில் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அனைவரிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு தந்தையின் இளமைக்காலம் முதல் இறப்பு காலம் வரை குடும்பத்திற்காக அவர் துணை நிற்பதையும், தந்தை மகனுக்கு இடையேயான உறவையும் சிறப்பாக எடுத்துச் சொன்ன இந்த படம் சூர்யாவின் கெரியரில் ஒரு மாணிக்க கல்.

    வெற்றி நாயகன்

    வெற்றி நாயகன்

    சூர்யாவின் படங்கள் வித்யாசமான கதைகளங்களையும், படத்திற்கு படம் மிரட்டலான நடிப்பாலும் அவரின் ரேஞ்ஜ் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களிடம் நல்ல வரவேற்பையும், மிகப் பெரிய வெற்றியும் தேடித்தந்த இந்த இரண்டாயிரம் முதல் 2010 ஆம் ஆண்டு காலகட்டம் சூர்யாவின் வாழ்வில் பொற்காலம் என சொல்லலாம். இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் தன்னைத் தானே செதுக்கிய சூர்யா தற்போது உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    Read more about: suriya சூர்யா
    English summary
    Actor Suriya's turning point movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X