ப்ர்ர்ர்.. இதான் இவரோட ட்ரேடு மார்க்.. பிறந்தநாள் வாழ்த்துகள் வெண்ணிறாடை மூர்த்தி!

சென்னை நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி இன்று தனது எண்பத்திமூன்றாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய சிரிப்பின் மூலமாக நமது திரை உலக மக்களை எல்லாம் கட்டிப் போட்டவர் இந்த வெண்ணிற ஆடைமூர்த்தி 1936 ஆம் ஆண்டு பிறந்தார்.
டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். நமது வெண்ணிற ஆடை மூர்த்தி அதுமட்டுமல்ல இந்த திரைப்படத்தின் மூலமாக தான் ஜெயலலிதா நிர்மலா ஸ்ரீகாந்த் போன்றவர்களும் அறிமுகமானார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பிஏபிஎல் பட்டதாரி சாஸ்திர கலையிலே பிஎச்டி வாங்கியவர்.

Actor Venniraadai moorthi celebrates his 83 birthday

வழக்கறிஞரும் கூட மிக அற்புதமான திரைக்கதை எழுதுவதில் வல்லுனர் பலவித நாடக மேடை நாடகங்களை அரங்கேற்றி பெயரும் புகழும் பெற்றவர் நமது வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவருடைய நடிப்பில் இவருடைய தனித்தன்மை வாய்ந்த டயலாக்ஸ் என்று சொல்வார்கள் அல்லவா thumri என்றெல்லாம் சொல்வது இவருடைய சிறப்பு. அதேபோல முகபாவங்கள் பார்த்தாலே உடனே சிரிப்பு வந்துவிடும் இவரோடு நடிப்பவர்கள் கூட அற்புதமாக பார்த்ததுமே சிரித்துவிடுவார்கள் அவ்வளவு அழகாக தன்னுடைய டயலாக் டெலிவரி எல்லாம் செய்வார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதேபோல மூர்த்தி அவர்களிடம் இருக்கக்கூடிய ஒரு நல்ல குணத்தின் காரணமாகவே பார்த்தீர்களேயானால் அறுபது எழுபது எண்பது என்று சஷ்டியப்த பூர்த்தி பீம ரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் என்றெல்லாம் இன்று கொண்டாடி 83 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நமது வெண்ணிற ஆடைமூர்த்தி அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் மிக அற்புதமான பாடல் ஆகிய மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாடலை பாடிய அழகான நடிகை மணிமாலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர்களுக்கு ஒரே ஒரு மகன் அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் எல்லா முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மூர்த்தி அவர்கள் ஒரு நல்ல நடனக் கலைஞரும் கூட மிக அற்புதமாக நடனமாடுவார்பொதுவாகவே நமது வெண்ணிறாடை மூர்த்தி அவர்கள் நான் சினிமா வர வேண்டும் அதில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணும் எனக்கு இல்லை இது ஒரு எதிர்பாராத விபத்து என்றும் சொல்லுவார் அதேபோல கமலஹாசன் நடித்த மாலை சூட வா என்ற திரைப்படத்திற்கு முழு திரைக்கதையும் எழுதியவர்.

மூர்த்தி சாதாரணமாக தனிமையை விரும்புபவர்-யார் பேசினாலும் அனாவசியமாக பேசமாட்டார் நமது சென்னையில் கோட்டூர்புரத்தில் நீண்டகாலமாக வசித்து வருகிறார்
இன்று 83வது பிறந்தநாள் காணும் வெண்ணிற ஆடைமூர்த்தி அவர்களுக்கு "பில்மி பீட்- தமிழ்" ஒன் இந்தியா சேனல் மூலமாக அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X