எனக்கு நண்பன்னா அது விஜய் மட்டும்தான்... நடிகர் ராகவா லாரன்ஸ் பெருமிதம்!
சென்னை: நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு உள்ளார் ராகவா லாரன்ஸ்
பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து இப்போது சந்திரமுகி பாகம் இரண்டில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் எனக்கு நண்பனா அது விஜய் மட்டும் தான் என ராகவா லாரன்ஸ் பெருமிதமாக கூறியுள்ளார்.

பேக்ரவுண்ட் டான்ஸராக
எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் சினிமாவில் இப்பொழுது உயர்ந்த இடத்தில் இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட ராகவா லாரன்ஸ் பேக்ரவுண்ட் டான்ஸராக திரைவாழ்க்கையில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து இப்பொழுது இந்திய அளவில் அனைவரும் கவனிக்க கூடிய மிக முக்கியமான நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

காஞ்சனா பாகங்கள்
நடன இயக்குனராக மட்டுமல்லாமல் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் இப்பொழுது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக காஞ்சனா பாகங்கள் வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.

ஹீரோவாக சந்திரமுகி பாகம்-2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சந்திரமுகி பாகம் 2 பி வாசு இயக்கத்தில் உருவாக இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வடிவேலு இதில் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருந்த சந்திரமுகி பாகம்-2 இப்பொழுது உருவாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

எனக்கு நண்பன்னா அது விஜய் மட்டும்தான்
ராகவா லாரன்ஸ் நடிகர் விஜய்யும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். திருமலை படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் தாம்தக்க தீம்தக்க பாடலில் போட்டி போட்டு நடனம் ஆடி அசத்தி இருப்பார்கள். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய ராகவா லாரன்ஸ் சினிமாவில் எனக்கு பெரிதாக நண்பர்கள் யாரும் கிடையாது எனக்கு நண்பன் என்று சொன்னால் அது விஜய் மட்டும் தான். விஜய்யும் நானும் நண்பர்கள் என்பதால் நான் அவரது படங்களில் நடனம் அமைக்க வேண்டும் என ஒருநாளும் கேட்டதில்லை. என் இயக்கத்தில் அவர் நடிக்க வேண்டும் என்றும் இதுவரை கேட்டதில்லை. அதேபோல அவரது படங்களில் நான் பணியாற்ற வேண்டுமென விஜய்யும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று வரை நல்ல நண்பர்களாக இருவரும் பழகி வருகிறோம். இவ்வாறு விஜய் உடனான நட்பு குறித்து ராகவா லாரன்ஸ் பெருமிதமாக பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











