விஜய்யை இப்பொழுது பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாக தெரிகிறார்.. நடிகை சங்கீதா
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு உள்ளார்
மாஸ்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்த இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் நடிகை சங்கீதா விஜய்யை இப்பொழுது பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறார் என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார்.

மாஸ்டர்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக உள்ளவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு மலையாள மொழியிலும் கொண்டாடப்பட்டு அங்கு மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன்
விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவருக்கும் மிகச் சரி சமமான கதை அமைக்கப்பட்டிருப்பதால் இப்படம் வேற லெவலில் சென்று விட்டது என்று சொல்லலாம். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் ஸ்டைலில் பாதியும் விஜய் ஸ்டைலில் பாதியும் எடுத்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

கடுமையாக விமர்சிக்கப்பட்டு
கோலமாவு கோகிலா, டாக்டர் என தனது ஸ்டைலில் கடத்தலை மையமாக வைத்து படங்களை இயக்கி அதில் டார்க் காமெடியே இப்போதைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கலக்கிக் கொண்டிருக்கும் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் . விஜய் இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் இடம் பெற்றிருந்தது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் ரசிகர்களை அந்த அளவிற்கு பூர்த்தி செய்யாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது இருப்பினும் இந்த படம் லாபகரமான வசூலை பெற்றுத் தந்ததாக தயாரிப்புக் குழு தெரிவித்திருந்தது
Recommended Video

விஜய் இப்போது பிரம்மாண்டமாக தெரிகிறார்
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்த படத்தில் விஜய் உடன் ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சங்கீதா விஜய் பூவே உனக்காக படத்தில் பார்க்கும்போது ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் இப்போதுள்ள விஜய்யை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறார் என அந்த நேர்காணலில் நடிகை சங்கீதா விஜய் குறித்து வியந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











