twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கம்பீரம் என்றால் விஜயகாந்த்… போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிரட்டிய ஹிட் படங்கள் !

    |

    சென்னை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் விஜயகாந்த். இவரது உண்மையான பெயர் விஜயராஜ். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து பள்ளிப் படிப்பை மதுரையில் தொடங்கினார்.

    சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனது.இதையடுத்து, தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் சிறுசிறு பணிகளைச் செய்து வந்தார்.

    ஏஞ்சல் தான் நீங்க.. ஒயிட் பிகினியில் டெமி ரோஸை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.. குவியுது லைக்ஸ்!ஏஞ்சல் தான் நீங்க.. ஒயிட் பிகினியில் டெமி ரோஸை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.. குவியுது லைக்ஸ்!

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக மாறிய விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்துள்ளார். இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஒருபார்வை.

    ஊமை விழிகள்

    ஊமை விழிகள்

    1986ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஊமைவிழிகள் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார். இந்த படத்தை ஆபாவாணன் திரைப்படக் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன் போன்ற ஏராளமானோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் திரையரங்கில் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

    மாநகர காவல்

    மாநகர காவல்

    மாநகர காவல் விஜயகாந்தின் சினிமா பயணத்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் இது என்று சொல்லலாம். இதில் விஜயகாந்த் இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் ஆனந்த்ராஜ், சுமா, நாசர், லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.

    கேப்டன் பிரபாகரன்

    கேப்டன் பிரபாகரன்

    1991ல் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இது விஜயகாந்தின் 100வது படமாகும். செம மாஸான ஹிட்டடித்த இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் திரையரங்கிற்கு இழுத்தது. காரணம் படத்தின் வசனம் மற்றும் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் கதை என்றே சொல்லலாம். படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நச் சென்று நடித்து இருப்பார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருப்பார். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஆட்டமா தேரோட்டமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

    சேதுபதி IPS

    சேதுபதி IPS

    பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சேதுபதி IPS, இந்த திரைப்படத்தில், பயங்கரவாதிகள் பிணையக்கைதியாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைப் பிடித்துக்கொள்கிறார்கள். பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதி IPS கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார் விஜயகாந்த், இப்படத்தில் மீனா, ஸ்ரீவித்யா, கவுண்டமணி,செந்தில் நடித்திருந்தனர்.

    சத்ரியன்

    சத்ரியன்

    விஜயகாந்தின் மாபெரும் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த திரைப்படம் சத்ரியன். மணிரத்னம் தயாரிப்பில், அவரது உதவியாளர் கே. சுபாஷ் இயக்கத்தில் உருவான படம் இது. இந்த திரைப்படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி பட்டையை கிளப்பியது. இதற்கு முக்கிய காரணம் விஜயகாந்தின் நடிப்பு மற்றும் அவரது நடிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் வில்லனாக நடித்த திலகன் அவர்களின் நடிப்பு. இப்படத்தில் ரேவதி, பானுபிரியா,விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

    புலன் விசாரணை

    புலன் விசாரணை

    செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த படம் புலன் விசாரணை. ஒன்பது பேரை கடத்தி, கொலை செய்து, உடல்களை, அவனது வீட்டினுள் புதைத்த ஆட்டோ சங்கர் வழக்கு, அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த கதையையும், அர்னால்ட் நடித்த, கமாண்டோ என்ற ஹாலிவுட் படத்தையும் சரி விகிதத்தில் கலந்து எடுத்த படம் தான் புலன் விசாரணை. இப்படத்தில், ரூபிணி, நம்பியார், ராதாரவி, ஆனந்தராஜ், சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 150 நாட்களை தாண்டி ஓடிய இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    ஆனஸ்ட்ராஜ்

    ஆனஸ்ட்ராஜ்

    1994-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ஆனஸ்ட்ராஜ். உயிருக்கு உயிராக நினைத்த நண்பனின் துரோகத்தால் குடும்பத்தை இழந்து துடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பார் விஜயகாந்த், இப்படத்தில், விஜயகாந்துக்கு ஜோடியாக கௌதமி நடித்திருப்பார், இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    English summary
    Vijayakanth is one of the powerful actors in the cinema industry, The best hit movie starring Vijayakanth as a police,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X