காரில் இருந்து செல்ஃபி எடுத்து கொடுத்த விக்ரம்.. ரசிகர்கள் ஷேர் செய்யும் த்ரோ பேக் இன்சிடென்ட்!
சென்னை: பொன்னியின் செல்வன், கோப்ரா, போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார் சியான் விக்ரம்.
நடிகர் சியான் விக்ரமுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நேற்று தகவல்கள் வெளியானது.
விக்ரமுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட செய்தியை கேட்டதும் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பிறகு சியான் விக்ரம் நார்மல் வாடிற்கு மாற்றப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் பெருமூச்சு விட வைத்தது.

ஆரம்பத்தில் பல தோல்விகள்
1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் விக்ரம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்திருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவருக்கு சரியான வெற்றி வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்தார். அப்பொழுது அவருக்கு டர்னிங் பாயிண்டாக இருந்த படம் தான் சேது. முதல் பாதியில் ரகளை செய்யும் விக்ரம், இரண்டாம் பாதியில் மனநல பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரை சியான் என்று கூப்பிடுவதனால் இவருக்கு அது பட்டப்பெயராகவும் மாறி சியான் விக்ரமாகவே மாறினார். இந்த படம் தான் இவர் நடிப்புக்கு தீனி போட்ட படமாகவும் அமைந்தது.

தனித்திறமை கொண்ட சியான்
தில், காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தது. சாமி, பிதாமகன், அந்நியன் போன்ற வித்தியாசமான கதைகளிலும் நடித்து வந்தார். அன்று முதல் இன்று வரை தமிழில் ஒரு முன்னணி நடிகராகவே இருந்து கொண்டிருக்கிறார். படத்திற்கு ஏற்ற கேரக்டராக மாற தன் உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் நடிகர் விக்ரமுக்கு முன்னணி பங்கு உண்டு. உடலில் எவ்வளவு மாற்றம் தேவைப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்ற தயங்காமல் பாடுபடுவார் நடிகர் விக்ரம்.

வருத்திக்கொண்டு நடிக்கும் சியான்
பிதாமகன், ஐ போன்ற படங்களில் இவரது நடிப்பை மிஞ்ச யாராலும் முடியாது என்று ரசிகர்கள் பெருமைப்படும் அளவிற்கு அமைந்தது.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான மகான் திரைப்படம் ott தளத்தில் வெளியானது. மகான் திரைப்படத்தில் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருப்பார். தற்போது சியான் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற பல படங்கள் வெளிவரவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். இந்நிலையில் சமீபத்தில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சியான் விக்ரம் நேற்று நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்தது.

போஸ் கொடுத்த சியான்
எப்பொழுதும் ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கும் நடிகர்களுள் சியான் விக்ரமுக்கு முதலிடம் உண்டு என்று கூறி விக்ரமின் ரசிகர்கள் ஒரு விடியோவை பகிர்ந்து வருகின்றனர், சியான் விக்ரம் காரில் செல்லும் பொழுது, ரசிகர் ஒருவருக்கு காரில் இருந்தே செல்ஃபி எடுத்து கொடுத்த வீடியோவும், வேறு ஒரு ரசிகர் விக்ரமை போட்டோ எடுக்கும் பொழுது அழகாக போஸ் கொடுத்த த்ரோ பாக் வீடியோவையும் தற்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











