twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரிய ரம்பா தொடையா... செல் முருகன் சொன்ன முதல் ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த விவேக்

    |

    சென்னை: சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கபடும் மறைந்த நடிகர் விவேக்குடன் நீண்ட காலம் பயணித்தவர் அவருடைய நண்பரும் மேனேஜருமான செல் முருகன்.

    மேனேஜராக இருந்தது மட்டுமல்லாமல் விவேக் நடித்திருந்த பல காட்சிகளில் இவரும் நடித்திருந்தார்.

    இந்நிலையில் நடிகர் விவேக் தன்னை எப்படி சிந்திக்க வைத்தார், எப்படி நடிக்க வைத்தார் என்று செல்முருகன் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.

    கால் அமுக்குற மாதிரில்லாம் நடிக்க முடியாது... வடிவேலு விலக விவேக் உள்ளே வந்த கதைகால் அமுக்குற மாதிரில்லாம் நடிக்க முடியாது... வடிவேலு விலக விவேக் உள்ளே வந்த கதை

    அஜித்

    அஜித்

    பேஜர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த முருகன் நடிகர் அஜித்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் பேஜர் வழங்கியுள்ளார். அஜித் மூலம்தான் நடிகர் விவேக்கின் அறிமுகம் செல் முருகனுக்கு கிடைத்ததாம். பேஜர், செல்போன் என்று அந்தத் துறையில் இருந்ததால்தான் அவருடைய பெயரும் செல்முருகன் என்று ஆனது.

     செல் முருகன்

    செல் முருகன்

    ஆரம்ப காலகட்டத்தில் நண்பர்களாக இருந்த போது நடிகர் விவேக் இவரை சில காட்சிகளின் நடிக்க அழைப்பாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் அதை தட்டிக் கழித்துள்ளார் செல் முருகன். அப்போதுதான் திருநெல்வேலி திரைப்படத்தில் தனி காமெடி டிராக் எழுதும் வாய்ப்பு விவேக்கிற்கு கிடைத்தது. மூட நம்பிக்கைகளை மையப்படுத்தி காமெடி டிராக் எழுதியவர், செல் முருகனிடம் நகைச்சுவைத்திறன் இருந்ததால் நகைச்சுவை ஏதாவது தோன்றினால் சொல் என்று விவேக் கூறினாராம்.

     ரம்பா தொடை

    ரம்பா தொடை

    விவேக் கேட்டுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே செல் முருகன் விவேக்கிடம் ஒரு நகைச்சுவை தோன்றியதாக கூறி, ஒருவன் வேலைக்குச் செல்லாமல் வெட்டியாகவே இருக்கிறான். அவரிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கேட்டால் தொடையில் பல்லி விழுந்து அபசகுனமாகிவிட்டது. அதனால் தான் வேலைக்கு போகவில்லை என்று அந்த நபர் கூற,"பெரிய ரம்பா தொட. பல்லி விழுந்தா தூக்கி போட்டு போவியா" என்று விவேக் கவுண்ட்டர் கொடுப்பது போல ஒரு காட்சியை செல் முருகன் கூறியிருக்கிறார். அதனை கேட்டதும் விவேக் விழுந்து விழுந்து சிரித்தாராம். அப்படித்தான் விவேக்கின் படங்களில் காட்சிகள் எழுதத் தொடங்கினாராம்.

     செல் முருகனின் நீங்கா சோகம்

    செல் முருகனின் நீங்கா சோகம்

    நடிகர் விவேக் மறைந்த போது அவருடைய குடும்பத்தை நினைத்து மக்கள் வருந்தினார்களோ இல்லையோ செல் முருகனை நினைத்து தான் பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்தனர். அவருடைய மறைவிற்குப் பிறகு அவர் இல்லாமல் எந்தப் படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இருந்தவர், இப்போதுதான் சில படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறாராம். மேலும் அவர் நினைவாக அவர் விட்டுச் சென்ற மரங்கள் நடும் பணியையும் செல்முருகன் தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. யூத் திரைப்படத்தில்தான் முதன் முதலில் செல் முருகன் நடிக்க ஆரம்பித்தாராம்.

    English summary
    Actor Vivek laughed at the first joke by Cell Murugan, What is the Comedy?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X