Yash: யாஷ்ஷின் அம்மானுகூட பார்க்காம.. நெட்டிசன்கள் பார்த்த வேலை.. தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த யாஷ்!
பெங்களூரு: சமூக வலைதளங்களில் யார், எப்போது "ட்ரோல்" செய்யப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. இணையவாசிகள் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் கருத்துகளாக எழுதுகிறார்கள். சில நேரங்களில் காரணமே இல்லாமல் கூட "ட்ரோல்" செய்கிறார்கள். சமீபத்தில் நடிகர் யாஷின் தாயாரும், தயாரிப்பாளருமான புஷ்பா சிலரால் "ட்ரோல்" செய்யப்பட்டார்.
புஷ்பாவின் சமீபத்திய பேட்டிகள் பலரது கவனத்தை ஈர்த்தது. பி.ஏ. புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான 'கொத்தலவாடி' விரைவில் வெளியாக உள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோஷன்களில் யாஷின் தாயார் ஈடுபட்டு வரும்போது, அவர் பேசியதுதான் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.
புஷ்பா அந்த பேட்டியில் கூறுகையில், 'கொத்தலவாடி' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும்படி நான் எனது மகன் யாஷிடம் கேட்க மாட்டேன். வந்து படம் பார்க்கும்படியும் சொல்ல மாட்டேன். யாஷ் படத்தைப் பாத்தாலோ, படத்தை விளம்பரப்படுத்தினாலோ மட்டும் படம் வெற்றி பெறாது. எனக்கு பார்வையாளர்களின் கருத்து முக்கியம். நல்ல திரைப்படத்தை பார்த்து மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார். இதற்கு சிலர் பலவிதமான யூகங்களை கற்பனை செய்து கருத்து தெரிவித்து இருந்தனர். அதுக்கெல்லாம் அவர் விளக்கம் அளித்திருந்தார். மேலும், உங்கள் மகனுடன் எப்போது திரைப்படம் பண்ணுவீர்கள் என்ற கேள்விக்கு யாராவது 2000 கோடி ரூபாய் கடன் கொடுத்தால் கண்டிப்பாக பண்ணுவேன் என்று கூறியிருந்தார்.

யாஷ் தாயார்: சமீபத்தில் டிவி9 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புஷ்பா பேசுகையில், "யாராவது 2000 கோடி ரூபாய் கடன் கொடுத்தால் யாஷ் வைத்து படம் பண்ணலாம். அவர் படம் பண்ணுவதற்கு அவ்வளவு பட்ஜெட் தேவை. முதலீடு செய்பவர்கள் இருந்தால் கண்டிப்பா படம் பண்ணுவேன். எப்படியாவது யாஷ் உடைய தேதிகளை வாங்குகிறேன்" என்றார். இந்த வீடியோவை வைரல் செய்து சிலர் "ட்ரோல்" செய்தனர். 400, 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிப்பதே கஷ்டம். அதில் 2000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமா? அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் பண்ண முடியுமா? என்றெல்லாம் கேலியாக பேசினார்கள். இணையத்தில் இதற்காகவே புஷ்பா ட்ரோல் செய்யப்பட்டார்.
ரூ.4000 கோடி பட்ஜெட்: ஆனால் இப்போது 'ராமாயணம்' திரைப்படத்தின் பட்ஜெட்டை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளர் நிமித் மல்ஹோத்ரா, 'ராமாயணம்' பாகம்-1 மற்றும் பாகம்-2 சேர்த்து ஒட்டுமொத்த பட்ஜெட் 4000 கோடி ரூபாய் என்று கூறியுள்ளார். 'ராமாயணம்' திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இணை தயாரிப்பாளராகவும் கைகோர்த்துள்ளார். அதாவது யாஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 2000 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி: இதன்மூலம் யாஷ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரிய அளவில் தயாரிக்கப்பட இருக்கிறது. இது எல்லாம் தெரிந்துதான் யாஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் தயாரிக்க 2000 கோடி ரூபாய் வேண்டும் என்று அவரது தாயாரும் தயாரிப்பாளருமான புஷ்பா கூறியுள்ளார் என இணையதள வாசிகள். அவரை "ட்ரோல்" செய்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று யாஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது மிகப்பெரிய விவாதமாக மாறி உள்ளது.

ராமாயணம் படக்குழு: நிதீஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த திரைப்படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ஹனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார்கள். அடுத்த வருடம் தீபாவளிக்கு முதல் பாகம் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படம் உலக அளவில் பல மொழிகளில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











