»   »  சம்பளத்தை குறைப்பீங்களா சாமிகளா?

சம்பளத்தை குறைப்பீங்களா சாமிகளா?

Subscribe to Oneindia Tamil

நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் போர்க்கொடிஉயர்த்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவ்வப்போதுஏதாவது தற்காலிக தீர்வு கண்டு சமாளிப்பது திரையுலகினரின் வழக்கம்.

அப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுதான் ஹீரோக்களின் சம்பளக் குறைப்பு. அடிக்கடி இந்த கோஷம்தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆவேசமாக கிளம்பும். ஆனால் அப்படியே அங்கிப் போய் விடும்.

ஆனால் தற்போது படு வேகமாக இந்த கோஷத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். கடந்தஜெயலலிதா ஆட்சியின்போது தமிழ்த் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கினார். அதில்முக்கியமானது திருட்டு விசிடி ஒழிப்பு. அதன் பின்னர் ஓடவே முடியாத படங்கள் கூட வசூலை அள்ளஆரம்பித்தன.

தற்போது திமுக அரசும் பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளது. தமிழில் டைட்டில் வைத்தால் கேளிக்கைவரி விலக்கு, படப்பிடிப்புக் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகளை திமக அரசு அளித்துள்ளது.

இதனால் படத் தயாரிப்பு முன்பை விட படு விறுவிறுப்பாக உள்ளது. பல புது நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன. பட பூஜைகளும் அமர்க்களமாகி வருகின்றன. பெரிய பெரிய பட நிறுவனங்கள் கோடி கோடியாககொட்ட காத்திருக்கின்றன. மும்பை வாலாக்களும் இப்போது கோலிவுட் பக்கம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் என்னதான் சலுகைகள் வரிசையாக தரப்பட்டாலும் கூட பெரிய நடிகர்களை வைத்துப் படம்எடுத்தால் சலுகைகளை செல்லாக்காசாக்குவது போல அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் மாபெரும் மலையாகஇருப்பது தயாரிப்பாளர்களை கடுப்படைய வைத்துள்ளது.

சாதாரண தனுஷ் முதல் விஜய் வரையிலான நடிகர்களே இப்போது கோடிகளில்தான் சம்பளம் வாங்குகிறார்கள்.இதனால் படத்தின் குறைந்தபட்ச பட்ஜெட்டே ரூ. 5 கோடியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இதுவே கமல், ரஜினிபோன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

ரஜினியை வைத்து ஏ.வி.எம். தயாரித்து வரும் படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் என்கிறார்கள்.கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் பட்ஜெட் 25 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

நடிகர்கள் தவிர நடிகைகளுக்கும் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. திரிஷா போன்ற நடிகைகள் 75 லட்சம்வரை கேட்கிறார்கள். ஒரு கோடியைத் தொட திட்டமிட்டுள்ளார் திரிஷா (தெலுங்கில் எப்போதோ தொட்டுவிட்டார்).

இந்த அளவுக்கு இங்கே சம்பளம் கொடுக்காவிட்டால் அத்தனை பேரும் தெலுங்குக்கு ஓடி விட தயாராகஇருக்கிறார்கள்.

இப்படி சம்பளம் கொடுத்தே தாலி அத்துக் கொண்டிருப்பதை விட பேசாமல் நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்ககடுமையான நடவடிக்கைகள் எடுத்து இந்த நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு கட்ட தற்போது தயாரிப்பாளர்கள்உத்தேசித்துள்ளனர்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாம். ஒரேதவணையாக வாங்காமல் பல தவணைகளாக சம்பளத்தைப் பெற முன்வர வேண்டும். சம்பளத்தின் ஒரு பகுதியைவிநியோக உரிமை உள்ளிட்ட வேறு வழியில் பெற வேண்டும் என பல யோசனைகள் ன்வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அடுத்த கட்டமாக முன்னணி நடிகர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தவும் தயாரிப்பாளர்கள் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil