»   »  நட்சத்திர கிரிக்கெட்-மாராதான் ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ், தெலுங்கு நடிகர்களின் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்.-என்.டி.ஆர். கோப்பை என்ற பெயரில் ஷார்ஜாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகர்கள் கலந்து கொள்ளும்கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் போட்டியில் கலந்துகொள்ள பல நடிகர்களுக்கு விசா கிடைக்கவில்லை.இதையடுத்து ஷார்ஜா போட்டி கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக சென்னையில் இப்போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணி முதல் தலா 30 ஓவர்கள் கொண்ட பகலிரவுப் போட்டியாக இது நடைபெறுகிறது. ஆரோக்கியா கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரிக்கெட் போட்டியை ஜெயா டிவி நேரடியாக ஒளிபரப்புகிறது.இதில் தமிழ் திரையுலகம் சார்பில் அப்பாஸ், சிம்பு, ஆர்யா, ஸ்ரீகாந்த், விஷால், விக்ராந்த், ஷாம், ரமணா உள்ளிட்ட பிரபலநடிகர்களும், தெலுங்கு நடிகர்கள் சார்பில் தருண் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.மாரத்தான் போட்டி:அதே போல சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் மாரத்தான் பந்தயம் நாளை நடைபெறுகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3230 சார்பில் ஆண்டு தோறும் சென்னைமாவட்ட மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் 21.1 கிமீ மாரத்தான் பந்தயமும், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்கும் 2 கிமீ தூர ஓட்டமும்,பிரபலங்கள் பங்கேற்கும் அமைதி 5 கிமீே ஓட்டமும், 10 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கான 5 கிமீ ஓட்டமும், 16 முதல் 20வயது வரையிலானவர்களுக்கான 10 கிமீ ஓட்டமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிமீ ஓட்டமும் நடத்தப்படுகிறது.இந்த மாரத்தான் பந்தயம் அண்ணா சதுக்கத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. கலங்கரை விளக்கம், நொச்சிகுப்பம், பட்டினப்பாக்கம், திருவிக பாலம், ஆவின் பால் பூத், 3வது, 6வது அவென்யூ, பெசன்ட் நகர் வழியாக சென்று திரும்பிஅண்ணா சதுக்கம் வந்தடைகிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கென்யா வீரர்கள் அம்புரோஸ் நோகா மாகு, ஜோசாத் பாட்ரிக் மற்றும் சின்னப்பா, நாதூராம்உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.இந்த மாரத்தான் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்குரூ.2.20 லட்சமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று ரோட்டரிகவர்னர் ஆர்.ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.இந்த போட்டிக்காக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவு செய்யப்பட்டுள்ளது.மேலும் போட்டி நடக்கும்பாதையில் போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் 10 மணி வரை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர கமிஷனர்ஆர்.நடராஜ் கூறியுள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட்-மாராதான் ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ், தெலுங்கு நடிகர்களின் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்.-என்.டி.ஆர். கோப்பை என்ற பெயரில் ஷார்ஜாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகர்கள் கலந்து கொள்ளும்கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் போட்டியில் கலந்துகொள்ள பல நடிகர்களுக்கு விசா கிடைக்கவில்லை.இதையடுத்து ஷார்ஜா போட்டி கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக சென்னையில் இப்போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணி முதல் தலா 30 ஓவர்கள் கொண்ட பகலிரவுப் போட்டியாக இது நடைபெறுகிறது. ஆரோக்கியா கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரிக்கெட் போட்டியை ஜெயா டிவி நேரடியாக ஒளிபரப்புகிறது.இதில் தமிழ் திரையுலகம் சார்பில் அப்பாஸ், சிம்பு, ஆர்யா, ஸ்ரீகாந்த், விஷால், விக்ராந்த், ஷாம், ரமணா உள்ளிட்ட பிரபலநடிகர்களும், தெலுங்கு நடிகர்கள் சார்பில் தருண் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.மாரத்தான் போட்டி:அதே போல சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் மாரத்தான் பந்தயம் நாளை நடைபெறுகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3230 சார்பில் ஆண்டு தோறும் சென்னைமாவட்ட மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் 21.1 கிமீ மாரத்தான் பந்தயமும், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்கும் 2 கிமீ தூர ஓட்டமும்,பிரபலங்கள் பங்கேற்கும் அமைதி 5 கிமீே ஓட்டமும், 10 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கான 5 கிமீ ஓட்டமும், 16 முதல் 20வயது வரையிலானவர்களுக்கான 10 கிமீ ஓட்டமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிமீ ஓட்டமும் நடத்தப்படுகிறது.இந்த மாரத்தான் பந்தயம் அண்ணா சதுக்கத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. கலங்கரை விளக்கம், நொச்சிகுப்பம், பட்டினப்பாக்கம், திருவிக பாலம், ஆவின் பால் பூத், 3வது, 6வது அவென்யூ, பெசன்ட் நகர் வழியாக சென்று திரும்பிஅண்ணா சதுக்கம் வந்தடைகிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கென்யா வீரர்கள் அம்புரோஸ் நோகா மாகு, ஜோசாத் பாட்ரிக் மற்றும் சின்னப்பா, நாதூராம்உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.இந்த மாரத்தான் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்குரூ.2.20 லட்சமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று ரோட்டரிகவர்னர் ஆர்.ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.இந்த போட்டிக்காக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவு செய்யப்பட்டுள்ளது.மேலும் போட்டி நடக்கும்பாதையில் போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் 10 மணி வரை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர கமிஷனர்ஆர்.நடராஜ் கூறியுள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ், தெலுங்கு நடிகர்களின் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

எம்.ஜி.ஆர்.-என்.டி.ஆர். கோப்பை என்ற பெயரில் ஷார்ஜாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகர்கள் கலந்து கொள்ளும்கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் போட்டியில் கலந்துகொள்ள பல நடிகர்களுக்கு விசா கிடைக்கவில்லை.

இதையடுத்து ஷார்ஜா போட்டி கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக சென்னையில் இப்போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணி முதல் தலா 30 ஓவர்கள் கொண்ட பகலிரவுப் போட்டியாக இது நடைபெறுகிறது.

ஆரோக்கியா கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரிக்கெட் போட்டியை ஜெயா டிவி நேரடியாக ஒளிபரப்புகிறது.இதில் தமிழ் திரையுலகம் சார்பில் அப்பாஸ், சிம்பு, ஆர்யா, ஸ்ரீகாந்த், விஷால், விக்ராந்த், ஷாம், ரமணா உள்ளிட்ட பிரபலநடிகர்களும், தெலுங்கு நடிகர்கள் சார்பில் தருண் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

மாரத்தான் போட்டி:

அதே போல சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் மாரத்தான் பந்தயம் நாளை நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3230 சார்பில் ஆண்டு தோறும் சென்னைமாவட்ட மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் 21.1 கிமீ மாரத்தான் பந்தயமும், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்கும் 2 கிமீ தூர ஓட்டமும்,பிரபலங்கள் பங்கேற்கும் அமைதி 5 கிமீே ஓட்டமும், 10 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கான 5 கிமீ ஓட்டமும், 16 முதல் 20வயது வரையிலானவர்களுக்கான 10 கிமீ ஓட்டமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிமீ ஓட்டமும் நடத்தப்படுகிறது.

இந்த மாரத்தான் பந்தயம் அண்ணா சதுக்கத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. கலங்கரை விளக்கம், நொச்சிகுப்பம், பட்டினப்பாக்கம், திருவிக பாலம், ஆவின் பால் பூத், 3வது, 6வது அவென்யூ, பெசன்ட் நகர் வழியாக சென்று திரும்பிஅண்ணா சதுக்கம் வந்தடைகிறது.

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கென்யா வீரர்கள் அம்புரோஸ் நோகா மாகு, ஜோசாத் பாட்ரிக் மற்றும் சின்னப்பா, நாதூராம்உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாரத்தான் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்குரூ.2.20 லட்சமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று ரோட்டரிகவர்னர் ஆர்.ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிக்காக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவு செய்யப்பட்டுள்ளது.மேலும் போட்டி நடக்கும்பாதையில் போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் 10 மணி வரை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர கமிஷனர்ஆர்.நடராஜ் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil