சினிமாவில் நடிக்க தில் இருக்கா?

இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
இப்படக்குழுவினர் இன்று சென்னை எம்எம் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இப்படத்தின் கதையை தற்போதுள்ள பிரபல நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கதை பிடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் எதிர்மறை தன்மையைப் பார்த்து தயங்குகிறார்கள். அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
இப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். நடிகர்கள் மட்டுமல்ல, இப்படத்தில் கேமராமேன், இசையமைப்பாளர் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள்.
புதுமுக நடிகர் தேர்வை வித்தியாசமாக செய்ய இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான போட்டோக்களையும், வீடியோ சாம்பிள்களையும் [email protected] என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் (likes and comments) பெறுகிறாரோ அதனடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.
தில் இருக்கிறவங்க சோதனைக்கு தயாராகலாம்!


Click it and Unblock the Notifications











