Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
யோகா டீச்சர் அனுஷ்கா… சாப்ட்வேர் டாப்ஸி….
திரை வானில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்தாலும் சில நடிகர், நடிகையர்கள் மனதுக்கு பிடித்த தொழிலை செய்து கொண்டிப்பார்கள். ஹோட்டல் வைத்திருப்பார்கள் அல்லது பிசினெஸ் செய்வார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை பஸ் கண்டக்டராக தொடங்கியது. இப்போது சென்னையில் கல்யாண மண்டபத்தில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்.
அதேபோல பல திரை உலக பிரபலங்கள் என்ன தொழில் செய்கின்றனர் தெரிந்து கொள்ளுங்களேன்.
பஸ்கண்டக்டர் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவிற்கு வரும் முன்பாக பஸ் கண்டக்டராக ஸ்டைலாக பணிபுரிந்தவர். அந்த ஸ்டைல் இன்றைக்கும் தொடர்கிறது.
பிஸினெஸ் மேன் அரவிந்த் சுவாமி
ரோஜாவில் அறிமுகமான அரவிந்த் சுவாமி நடிப்புடன் தன்னுடைய பிஸினெசையும் கவனித்து வருகிறார். ட்ரெயினிங் மற்றும் டெவலப் மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பைக் ரேசர் அஜீத்
தல அஜீத்திற்கு பைக் என்றால் கொள்ளைப் பிரியம். ரேஸ் என்றால் விடவே மாட்டார். தவிர அவர் சிறந்த மெக்கானிக்.
டாக்டர் அஜ்மல்
அஞ்சாதே, கோ படங்களில் நடித்த அஜ்மல் ஒரு டாக்டர் என்பது பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் நடிப்புடன் டாக்டர் தொழில் செய்கின்றனர்.
பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் மாதவன்
அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆகும் முன் மாடலிங் செய்த மாதவன் பெர்சனாலிட்டி டெவலப் மென்ட் நடத்துகிறார். பிரபல நடிகர் ஆன பின்னரும் அந்த தொழிலை விட வில்லை.
ரக்பி வீரர் வினய்
நடிகர் வினய், விஸ்வரூபம் வில்லன் ராகுல் போஸ் ஆகியோர் ரக்பி வீரர்களாம்.
கிரிக்கெட் வீரர் விஷ்ணு
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த விஷ்ணு கிரிக்கெட் விளையாட்டு வீரராம். இன்றைக்கும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பேட்டும் கையுமாக அவரைப் பார்க்கலாம்.
யோகா டீச்சர் அனுஷ்கா
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான அனுஷ்கா ஷெட்டியின் ஆரம்ப கால வாழ்க்கை யோகாவில் தொடங்கியது. இன்றைக்கும் அவர் பிரபல நடிகையாக உயர்ந்த பின்னரும் மெடிடேசன், யோகாவை கைவிடாமல் இருக்கிறார்.
பேஸ்கட் பால் வீராங்கனை நீது சந்திரா
ஆதி பகவான் கதாநாயகி நீது சந்திரா மகாராஷ்டிரா மாநிலத்தில் பேஸ்கட் பால் வீராங்கனையாம். திரைத்துறைக்கு வரும் முன்பு பறந்து பறந்து கோல் போட்டவர்... உயரத்தைப் பார்த்தாலே தெரிகிறதா?
சாப்ட்வேர் டாப்ஸி
வெள்ளாவி நடிகை டாப்ஸி ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராம். நடிக்க வரும் முன்பு பிரபல ஐ.டி. கம்பெனியில் புரோகிராமராக வேலை பார்த்த அனுபவம் உள்ளதாம்.