»   »  ரீமா கொடுத்த கரண்சி ஷாக்!

ரீமா கொடுத்த கரண்சி ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பார்ட்டியில் கலந்து கொண்டு ஆட்டம் போட ரீமா சென் கேட்டதொகையைக் கேட்டு சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்று தெறித்து ஓடியிருக்கிறது.

2006ம் ஆண்டை கை கூப்பி அனுப்பி விட்டு, 2007ம் ஆண்டை கை குலுக்கிவரவேற்க டிசம்பர் 31ம் தேதி சென்னை மாநகரமே மப்பும், மந்தாரமுமாககாத்திருந்தது.

புத்தாண்டையொட்டி நட்சத்திர ஹோட்டல்களில் ஆட்டமும், பாட்டமும்அமர்க்களப்பட்டன. பொது ஜனங்களைப் போல பிரபலங்களும் புத்தாண்டைஅமர்க்களமாக கொண்டாடினர்.

அடையாரில் உள்ள ஒரு ஒரு நட்சத்திர ஹோட்டல் ரீமா சென்னை தங்களதுபுத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஆட்டம் போட வைக்க தீர்மானித்து, அவரைஅணுகியது.

ஆட்டத்திற்கு ஓ.கே. சொன்ன ரீமா, பெரிய அமெளண்ட் ஒன்றை அப்பீயரன்ஸ்தொகையாக கேட்டுள்ளார். அதாவது ஒரு படத்தில் நடிக்க தான் வாங்கும் தொகையைரீமா கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அரண்டு போன ஹோட்டல் நிர்வாகம், அம்மாடி, ஆத்தாடி என்றுபின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போய் விட்டனராம்.

ஹோட்டல் சான்ஸ் நழுவிப் போய் விட்டாலும் கூட ரீமா தனது புத்தாண்டு ஆட்டத்தைமும்பையில் கோலாகலமாக கொண்டாடினாராம். அடுத்த நாள் மப்பு தெளிய ரொம்பநேரமாச்சாம்.

கோலிவுட் கோமான்களும், சீமாட்டிகளும் வழக்கம் போல இந்த புத்தாண்டையும்வெளுத்து வாங்கியுள்ளனர். இடுப்பழகி த்ரிஷா வழக்கமாக புத்தாண்டை தோழியர்,தோழர்களோடு தடபுடலாக கொண்டாடுவார்.

சென்னையில் இருந்தால் ஏதாவது ரிசார்ட் அல்லது மகாபலிபுரம் சாலையில்நண்பிகளோடு காரில் போய் இறங்கி கலக்குவார். உற்சாக பானத்துக்கும்குறையிருக்காது. இந்த ஆண்டும் சிறப்பாகவே செலபரேட் செய்துள்ளார், ஆனால்இங்கல்ல அமெரிக்காவில்.

அங்கு அவரது பள்ளிக்காலத் தோழிகள் 3 பேர் இருக்கிறார்களாம். அவர்களோடுசேர்ந்துதான் 2007ம் ஆண்டை அமர்க்களமாக வரவேற்றாராம் த்ரிஷா.

அமெரிக்காவில் எங்கு கொண்டாடினார் தெரியுமா? அட்டகாச நகரமான லாஸ்வேகாஸில். சும்மா நாட்களிலேயே அங்கே பார்ட்டிகளும், கொண்டாட்டங்களும்தடபுடல் படும். புத்தாண்டு கொண்டாட்டம் எப்படியிருந்திருக்கும்? அப்படி ஒருஅடாவடி, அமர்க்களத்திற்கு மத்தியில்தான் த்ரிஷா தனது புத்தாண்டுக்கொண்டாட்டத்தை அசத்தலாக அனுபவித்துள்ளார்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஜாலியாக சுற்றி வரும் த்ரிஷா அதை முடித்துவிட்டு அப்படியே ஹைதராபாத் வந்திறங்குகிறார். அங்கு தொடங்கும்செல்வராகவனின் தெலுங்குப் படத்தில் நடிக்கவுள்ளார்.

சென்னையிலிருந்து தற்காலிகமாக தனது முகாமை ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளநயனதாரா துளசி படப்பிடிப்பு யூனிட்டாரோடும் தனது புதிய தெலுங்குநண்பர்களோடும் புத்தாண்டைக் கொண்டாடினாராம். சிம்பு எங்கே, எப்படிகொண்டாடினார் என்று தெரியவில்லை.

ஆசின், போக்கிரி படப்பிடிப்பிலும், வடபழனி ஸ்டார் ஹோட்டலில் பாவனாவும்கொண்டாட்டத்தை வைத்துக் கொண்டனர். கோபிகா திருச்சூரில் புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டாராம்.

‘சிலு சிலு‘ அழகி ஷீலா, சீனாதான 001 படப்பிடிப்பின்போது புத்தாண்டைக்கொண்டாடியுள்ளார். ஷ்ரியா மும்பையில் ஆட்டம் போட்டுள்ளார்.

சீயான் விக்ரம் தனது குடும்பத்தோடு குன்னூரில் கொண்டாட்டத்தை வைத்துக்கொண்டாராம்.

சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் போலீஸ்விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் வகையில் இருந்ததாம்.

பல சின்னத் திரை நடிகைகள் அடித்த கொட்டம்தான் பெரும் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது. அதிலும் ஒரு நடிகை, போட்ட முக்கால் நிர்வாண ஆட்டம் அந்தஹோட்டலையே படு ஹாட் ஆக்கி விட்டதாம். அவருடன் போட்டி போட்டு பலரும்கூட சேர்ந்து கும்மாட்டம் ஆட படு பச்சையாகிப் போனதாம் பார்ட்டி.

பல நட்சத்திர ஹோட்டல்களில் 2 மணிக்கு மேலும் ஆட்டம், பாட்டம் தொடர்ந்ததாம்.ஆட்டமாடிய பல பெண்களுக்கு உடை, உடம்பில் நிற்கவே இல்லையாம். அப்படிஒரு அந்தராட்டம் ஆடியிருக்கிறார்களாம்.

Read more about: reema shocks hotelwallas

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil