»   »  மாமா பிரசாத் பீதியில் நடிகைகள்!

மாமா பிரசாத் பீதியில் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத், போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பல பிரபலநடிகைகள் குறித்தும் புட்டுப் புட்டு வைத்துள்ளார். இதனால் பிரசாத்துடன், தொடர்புடைய பல முன்னணி நடிகைகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


பெங்களூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 45). தென்னிந்தியாவின் பிரபல விபச்சார புரோக்கர். கன்னட பிரசாத் என்று அறியப்படும்இவர், தென் மாநிலங்களில் விபச்சாரத்தை பெரிய தொழில் நிறுவனம் போல நடத்தி வந்தார்.

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸில் மட்டும் பிரசாத் மீது 18 வழக்குகள் உள்ளன. நீண்ட காலமாக சிக்காமல் இருந்து வந்த பிரசாத்தை,சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையிலான போலீஸ் படை 2 நாட்களுக்கு முன் எழும்பூரில் ஒரு விடுதியில்வைத்து கைது செய்தது. பிரசாத்துடன் அவரது மூன்றாவது மனைவி குசும், 4 கூட்டாளிகளும் சிக்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான அழகிகள், சப் புரோக்கர்கள், அதி நவீன தொலைத் தொடர்பு வசதிகள் என படு பக்காவாக விபச்சாரத் தொழிலை நடத்திவந்துள்ளார் பிரசாத்.

போலீசிடம் தனது விபச்சாரத் தொழில் குறித்து பல பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார் பிரசாத்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில்தான் 1989ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். ஹீரோ வேடம் கிடைக்கவில்லை, சிறு சிறு வேடங்கள்தான்கிடைத்தன. இதையடுத்து துணை நடிகைகளை ஏற்பாடு செய்யும் ஏஜென்டு ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்படியே தயாரிப்பாளர்கள் சிலருக்கு நடிகைகளை ஏற்பாடு செய்து தருவது வழக்கம். அது அப்படியே பழகி, விபச்சாரத் தொழிலில் இறங்கிவிடடேன். நேரடியாக நானே விபச்சாரத் தொழிலில் இறங்கியதால் நல்ல வருமானம் கிடைத்தது.

ஹீரோயினை அனுப்புவதாக இருந்தால் நல்ல காசு கிடைக்கும். துணை நடிகை என்றால் குறைவாக கிடைக்கும். எனக்குக் கிடைக்கும் பணத்தில்பாதியைத்தான் நடிகைகள், துணை நடிகைகளுக்குக் கொடுப்பேன்.

பணக்கார இளைஞர்களைத்தான் எனது வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்வேன். அவர்களுக்கு கல்யாணமான பெண்கள்தான் பிடிக்கும்.எனவே இதற்காகவே ஆந்திர மாநிலம் நெல்லூர், குண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து கல்யாணமான, 30 வயதுப் பெண்களை ஏற்பாடு செய்துதருவேன்.

என்னிடம் பல பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்து எனது கட்டுப்பாட்டில்வைத்துக் கொள்வேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் அதிகாரி, முக்கிய பிரபலங்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் எனது தொழிலை டெவலப்செய்தேன்.

சென்னையிலிருந்து நடிகைகளை மும்பைக்கும், வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்று தொழில் நடத்தினேன்.

ஒருமுறை புதுவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவருக்கு நான்கு எழுத்து நடிகை ஒருவரை ஏற்பாடு செய்தேன். அதில் சிக்கல் ஏற்பட்டுஎம்எல்ஏவுக்கும் எனக்கும் இடையே பிரச்சனையானது. அவர் என்னை மிரட்டினார். பிறகு போலீஸ் அதிகாரி ஒருவர் உதவியோடு அதிலிருந்துதப்பினேன்.

எனது விபச்சாரத் தொழிலை நவீனமாக மாற்றினேன். பெங்களூரில் இதற்காக அலுவலகம் அமைத்தேன். கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் உதவியுடன்இணைய தளங்களை ஏற்படுத்தி அதில் அழகிகளின் படங்களையும், தொலைபேசி எண்களையும் வெளியிட்டு தொழில் செய்தேன்.

பத்துக்கும் மேற்பட்ட சொகுசுக் கார்கள் என்னிடம் உள்ளன. இந்தக் கார்களிலும் விபச்சாரம் நடத்தினேன். கிழக்குக் கடற்கரை சாலை பக்கம் இந்தசொகுசு கார்களில் அழகிகளை அனுப்பி விபச்சாரம் செய்தேன்.

ஜவுளியுடன் உருண்ட கண்ணழகி நடிகை:

சமீபத்தில் பிரபல கண்ணழகி நடிகை வாய்ப்பு குறைந்த நிலையில் இருந்தார். அவரை தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு பிரபலமான ஜவுளிக் கடைஅதிபர் கேட்டார். இதையடுத்து மலேசியாவில் உள்ள எனது நண்பர் மூலம் ஹோட்டலில் அறை எடுத்து இருவரையும் அங்கு அனுப்பி வைத்தேன்.அதில் எனக்கு பெரும் பணம் கிடைத்தது.

இதேபோல நட்பான நடிகை, குண்டு குண்டு பலான நடிகைகள், ராகமான நடிகை ஆகியோரையும் சிங்கப்பூர், துபாய் ஆகிய பகுதிகளுக்குஅனுப்பி பெரும் பணம் சம்பாதித்தேன். நான் அனுப்பிய நடிகைகளில் ஒருவர் தொழிலதிபர் ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்துஎனது குரூப்பிலிருந்து விலகி விட்டார்.

இந் நிலையில் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் எனக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து என்னை தூக்கி உள்ளே "போட்டு விட்டார்அந்த அதிகாரி.

தொழில்தான் முக்கியம் என்று நினைத்த நான் அந்த அதிகாரியுடன் சமரசமாக போக முடிவு செய்து அவர் விரும்பிய ஒரு பிரபல நடிகையைஅனுப்பி வைத்தேன். அந்த நடிகையை நான்தான் சினிமாவுக்கே கொண்டு வந்தேன். இப்போது அவர் பிரபலமான நடிகையாக உள்ளார்.

எனக்காக அந்த காவல்துறை அதிகா>யுடன் சந்தோஷமாக இருக்க அந்த நடிகை சம்மதித்தார். பின்னர் நான் சில மாதங்களில் விடுதலையாகிவெளியே வந்தேன் என்று கூறியுள்ளார் பிரசாத்.

அவருக்கும், பத்து பிரபல நடிகைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், பிரசாத் பல இடங்களுக்கும் அந்த நடிகைகளைஅனுப்பி வைத்தள்ளதாகவும் தெரிகிறது.

தங்களைப் பற்றிய பல தகவல்களை பிரசாத் வெளியிட்டுள்ளதால் அவருடன் தொடர்புடைய பிரபல நடிகைகள் பெரும் பீதியில்ஆழ்ந்துள்ளனராம்.

பிரசாத்தை போலீஸ் காவலில் எடுத்து மேலும் துருவ போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil