»   »  விபச்சார துணை நடிகை: உதவி இயக்குநர்கைது-நடிகைகள் ஆல்பம் சிக்கியது!

விபச்சார துணை நடிகை: உதவி இயக்குநர்கைது-நடிகைகள் ஆல்பம் சிக்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துணை நடிகையின் உதவியுடன் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்த உதவி இயக்குநரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

சென்னை நகர விபச்சாரத் தடுப்புப் பி>வு போலீஸார் தீவிர விபச்சார வேட்டையில் இறங்கியுள்ளனர். இதில்சமீபத்தில் மாபெரும் மாமா கன்னட பிரசாத் சிக்கினார்.

இந் நிலையில் நேற்று துணை நடிகை ஒருவரும், உதவி இயக்குநரும் போலீஸ் பிடியில் சிக்கினர். தி.நகர்நடேசன் பூங்கா பகுதியில், விபச்சார புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதையடுத்து அங்கு விபச்சாரத்தடுப்புப் பிரிவு காவலர் ஒருவர் மாறுவேடத்தில் நிறுத்தப்பட்டார். அப்போது அவரை ஒரு விபச்சார புரோக்கர்அணுகினார்.

அவரது பெயர் நிரஞ்சன் என்கிற ரவிகிருஷ்ணன். தன்னிடம் சில நடிகைகள் இருப்பதாகவும், விரும்பினால்ஜாலியாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார் நிரஞ்சன்.

அக்தோடு நில்லாமல் ஒரு புகைப்பட ஆல்பத்தையும் காட்டியுள்ளார். அதில், லஷ்மி ராய் உள்ளிட்ட சிலநடிகைகளின் படங்கள் இருந்தன. அவற்றுக்குக் கீழ் அந்த நடிகைகளுடன் இன்பம் அனுபவிக்க என்ன ரேட்என்கிற விவரமும் எழுதப்பட்டிருந்தது.

பக்காவாக வந்த அந்தப் புரோக்கரையும், அவரது கும்பலையும் வளைத்துப் பிடிக்க முடிவு செய்து, நீங்கள்காட்டிய நடிகைகளின் ரேட் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை உள்ளது. நமக்குக் கட்டுப்படியாகாது.எனவே குறைந்த ரேட்டில் உள்ளவர்கள் என்றால் தேவலை என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட நிரஞ்சன், அதற்கென்ன குரூப் டான்ஸ் ஆடும் நடிகைகள் நிறைய உள்ளனர். அவர்களில் ஒன்றைஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்க, போலீஸ்காரரும் பேஷாக என்று கூறியுள்ளார்.

பின்னர் செல்வி என்கிற பெண்ணைப் போய் பார்க்குமாறு கூறி முகவரியையும் காவல>டம் கொடுத்தார்நிரஞ்சன். அவரும் செல்வியை சந்தித்தார்.

அட்டகாசம், உல்லாசம், இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளசெல்வி, தனது ரேட்டைக் கூறவே அந்த மாறுவேட போலீஸ்காரர், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துபோலீஸ் படையை வரவழைத்தார்.

போலீஸார் விரைந்து வந்து நிரஞ்சனையும், செல்வியையும் வளைத்துப் பிடித்தனர். நிரஞ்சனிடம் போலீஸார்விசாரணை நடத்தியபோது, தெலுங்கில் நயனதாரா நடித்த யோகி படம் உள்பட சில படங்களில் உதவிஇயக்குநராக நிரஞ்சன் பணியாற்றியது தெரிய வந்தது.

சேலத்தைச் சேர்ந்த செல்வி கணவரைப் பிரிந்து சென்னைக்கு வந்தார். அப்போது நிரஞ்சனிடம் சிக்கி அவரிடம்தன்னை இழந்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர்.

தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக செல்வியை பலரிடம் அனுப்பி வைப்பாராம்நிரஞ்சன். அப்படியும் சரியான வாய்ப்புகள் இல்லாததால், செல்வியை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திப்பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

நிரஞ்சனிடம் லஷ்மி ராய் போட்டோ இருந்ததும், அதற்குக் கீழ் ரூ. 1லட்சம் என ரேட் போடப்பட்டிருந்ததும்போலீஸாரைக் குழப்பியுள்ளது. இதுதொடர்பாக நிரஞ்சனிடம் மேலும் விசாரணை நடத்த போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.

நிரஞ்சன் குறித்து சென்னை மாநகர கமிஷ்னர் லத்திகா சரண் கூறுகையில், விபச்சார வழக்கில் கைதான உதவி இயக்குநர் நிரஞ்சனிடமிருந்து சிலநடிகைகளின் போட்டோ ஆல்பமும், செல்போன் எண்களும் கிடைத்துள்ளன. அதுகுறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. விபச்சாரத்தைத்தடுக்க போலீஸார் தொடர்ந்து அதிரடியாக செயல்படுவார்கள் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil