நானும் ஐயப்பன் கோவில்சென்றேன்: சுதா சந்திரன் நடிகை ஜெயமாலாவைத் தொடர்ந்து இன்னொடு நடிகையான சுதா சந்திரன், தானும்ஐயப்பன் கோவிலுக்குள் சென்று ஐயப்பனை வழிபட்டதாக கூறியுள்ளதால் ஐயப்பன்கோவில் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதற்கிடையே இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனகேரள அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் அறிவித்துள்ளார்.கடந்த 18 ஆண்டுகளுக்குள் ஒரு பெண் ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்துசுவாமி விக்கிரகத்தைத் தொட்டு வணங்கியதாகவும், அதனால் ஐயப்பன் கோபம்அடைந்துள்ளார்,கோவிலில் தீட்டு ஏற்பட்டுள்ளது என்று சமீபத்தில் ஜெயலலிதாவின் ஆஸ்தானஜோதிடரான உன்னிகிருஷ்ண பணிக்கர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்தத் தகவல் வெளியாகி சில நாட்கள் கழிந்த நிலையில், நான்தான் அந்தப் பெண்,19 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் சென்று கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவிக்கிரகத்தைத் தொட்டு வணங்கினேன் என்று பிரபல கன்னட நடிகை ஜெயமாலாதெரிவித்தார்.கூட்ட நெரிசலால், தான் கர்ப்பக்கிரகத்திற்குள் தள்ளப்பட்டதாகவும், அதனால்தான்மூல விக்கிரகத்தை தொட்டு வணங்கியதாகவும், இது தவறு என்று பின்னர் தெரியவந்ததால் மன்னித்து விடுமாறு கூறி கடவுளை பிரார்தித்ததாகவும் ஜெயமாலாதெரிவித்திருந்தார்.ஆனால் இதை ஏற்க ஐயப்பன் கோவில் தந்திரிகள் மற்றும் தேவஸம் போர்டுஉறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.இதுதொடர்பாக ஐயப்பன் கோவில் மேல் சாந்தி கண்டேரு மகேஸ்வரு தந்திரிகூறுகையில், ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்குள் ஒரு பெண் செல்ல வாய்ப்பேஇல்லை. அப்படி இருக்கையில், கூட்ட நெரிசலால் கர்ப்பக்கிரகம் வரை தான்தள்ளப்பட்டதாக அந்தப் பெண் (ஜெயமாலா) கூறுவதை நம்பவே முடியாது.ஏராளமான பக்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், தேவஸம் போர்டு உறுப்பினர்கள்இருக்கும்போது அவர்களைத் தாண்டி உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை.அப்படியே அப்பெண் சென்றிருந்தாலும், யாருடைய உதவியும் இன்றி அவரால்சென்றிருக்க முடியாது. அவருக்கு உதவி செய்தது யார் என்பதை வெளியிடவேண்டும். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.தேவஸம் போர்டு சார்பில் நான் தனியாக விசாரணை நடத்தவுள்ளேன். இதேபோலமாநில அரசும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் என் மீதும் அந்தப் பெண் புகார்கூறியுள்ளார். அதுகுறித்து சட்டரீதியாக நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்மகேஸ்வரு தந்திரி.மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கூறுகையில், 10 வயது முதல் 50வயது வரையிலான பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.இதில் தேவஸம் போர்டு உறுதியாக உள்ளது. இந் நிலையில் ஐயப்பன் விக்கிரகத்தைத்தொட்டு வணங்கியதாக நடிகை கூறுவதை ஏற்க முடியாது.ஐயப்பன் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான செயல் இது. சிலர் சேர்ந்துசெய்த சதிச் செயலாகவே இதை கருத வேண்டியுள்ளது. இதுதொடர்பாக தேவஸம்போர்டுடன் கலந்து பேசி உரிய விசாரணை நடத்தப்படும் என்றார் சுதாகரன்.இந்த சர்ச்சையே அடங்காத நிலையில் நடிகை சுதா சந்திரன் (மயூரி), தானும் ஐயப்பன்கோவிலுக்குள் சென்று வணங்கியதாக கூறி பரபரப்பை மேலும்அதிகப்படுத்தியுள்ளார்.மும்பையில் உள்ள அவர் கூறுகையில், கடந்த 1989ம் ஆண்டு சபரிமலைகோவிலுக்கு நம்பினார் கெடுவதில்லை என்ற படத்தின் ஷூட்டிங்குக்காகசென்றிருந்தேன்.கோவிலின் 18ம் படிக்கு கீழ் நின்று நான் நடனம் ஆடும் காட்சியை படமாக்கினார்கள்.அக்காட்சி முடிந்ததும், இவ்வளவு தூரம் வந்து விட்டோம், சுவாமியை தரிசனம்செய்யாமல் போனால் என்ன என்று எண்ணிய நான் 18வது படி வழியாக செல்லாமல்,வடக்கு நடை வழியாக கோவிலுக்குள் சென்றேன்.பின்னர் ஐயப்பனை வணங்கினேன். இதை நான் தவறாக கருதவில்லை என்றுகூறியுள்ளார் சுதா சந்திரன்.20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த படத்தின் படப்பிடிப்புக்கு கேரளாவில் பலத்தஎதிர்ப்பு கிளம்பியது. ஷூட்டிங்கைத் தடை செய்யக் கோரி வழக்குகளும்தொடரப்பட்டன.ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து பலத்தபாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.ஐயப்பன் சிலையை தொட்ட நடிகை-கேரளாவில் சர்ச்சை!

By Staff
நடிகை ஜெயமாலாவைத் தொடர்ந்து இன்னொடு நடிகையான சுதா சந்திரன், தானும்ஐயப்பன் கோவிலுக்குள் சென்று ஐயப்பனை வழிபட்டதாக கூறியுள்ளதால் ஐயப்பன்கோவில் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனகேரள அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் அறிவித்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளுக்குள் ஒரு பெண் ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்துசுவாமி விக்கிரகத்தைத் தொட்டு வணங்கியதாகவும், அதனால் ஐயப்பன் கோபம்அடைந்துள்ளார்,

கோவிலில் தீட்டு ஏற்பட்டுள்ளது என்று சமீபத்தில் ஜெயலலிதாவின் ஆஸ்தானஜோதிடரான உன்னிகிருஷ்ண பணிக்கர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவல் வெளியாகி சில நாட்கள் கழிந்த நிலையில், நான்தான் அந்தப் பெண்,19 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் சென்று கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவிக்கிரகத்தைத் தொட்டு வணங்கினேன் என்று பிரபல கன்னட நடிகை ஜெயமாலாதெரிவித்தார்.

கூட்ட நெரிசலால், தான் கர்ப்பக்கிரகத்திற்குள் தள்ளப்பட்டதாகவும், அதனால்தான்மூல விக்கிரகத்தை தொட்டு வணங்கியதாகவும், இது தவறு என்று பின்னர் தெரியவந்ததால் மன்னித்து விடுமாறு கூறி கடவுளை பிரார்தித்ததாகவும் ஜெயமாலாதெரிவித்திருந்தார்.

ஆனால் இதை ஏற்க ஐயப்பன் கோவில் தந்திரிகள் மற்றும் தேவஸம் போர்டுஉறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஐயப்பன் கோவில் மேல் சாந்தி கண்டேரு மகேஸ்வரு தந்திரிகூறுகையில், ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்குள் ஒரு பெண் செல்ல வாய்ப்பேஇல்லை. அப்படி இருக்கையில், கூட்ட நெரிசலால் கர்ப்பக்கிரகம் வரை தான்தள்ளப்பட்டதாக அந்தப் பெண் (ஜெயமாலா) கூறுவதை நம்பவே முடியாது.

ஏராளமான பக்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், தேவஸம் போர்டு உறுப்பினர்கள்இருக்கும்போது அவர்களைத் தாண்டி உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை.

அப்படியே அப்பெண் சென்றிருந்தாலும், யாருடைய உதவியும் இன்றி அவரால்சென்றிருக்க முடியாது. அவருக்கு உதவி செய்தது யார் என்பதை வெளியிடவேண்டும். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தேவஸம் போர்டு சார்பில் நான் தனியாக விசாரணை நடத்தவுள்ளேன். இதேபோலமாநில அரசும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் என் மீதும் அந்தப் பெண் புகார்கூறியுள்ளார். அதுகுறித்து சட்டரீதியாக நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்மகேஸ்வரு தந்திரி.

மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கூறுகையில், 10 வயது முதல் 50வயது வரையிலான பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.இதில் தேவஸம் போர்டு உறுதியாக உள்ளது. இந் நிலையில் ஐயப்பன் விக்கிரகத்தைத்தொட்டு வணங்கியதாக நடிகை கூறுவதை ஏற்க முடியாது.

ஐயப்பன் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான செயல் இது. சிலர் சேர்ந்துசெய்த சதிச் செயலாகவே இதை கருத வேண்டியுள்ளது. இதுதொடர்பாக தேவஸம்போர்டுடன் கலந்து பேசி உரிய விசாரணை நடத்தப்படும் என்றார் சுதாகரன்.

இந்த சர்ச்சையே அடங்காத நிலையில் நடிகை சுதா சந்திரன் (மயூரி), தானும் ஐயப்பன்கோவிலுக்குள் சென்று வணங்கியதாக கூறி பரபரப்பை மேலும்அதிகப்படுத்தியுள்ளார்.

மும்பையில் உள்ள அவர் கூறுகையில், கடந்த 1989ம் ஆண்டு சபரிமலைகோவிலுக்கு நம்பினார் கெடுவதில்லை என்ற படத்தின் ஷூட்டிங்குக்காகசென்றிருந்தேன்.

கோவிலின் 18ம் படிக்கு கீழ் நின்று நான் நடனம் ஆடும் காட்சியை படமாக்கினார்கள்.அக்காட்சி முடிந்ததும், இவ்வளவு தூரம் வந்து விட்டோம், சுவாமியை தரிசனம்செய்யாமல் போனால் என்ன என்று எண்ணிய நான் 18வது படி வழியாக செல்லாமல்,வடக்கு நடை வழியாக கோவிலுக்குள் சென்றேன்.

பின்னர் ஐயப்பனை வணங்கினேன். இதை நான் தவறாக கருதவில்லை என்றுகூறியுள்ளார் சுதா சந்திரன்.

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த படத்தின் படப்பிடிப்புக்கு கேரளாவில் பலத்தஎதிர்ப்பு கிளம்பியது. ஷூட்டிங்கைத் தடை செய்யக் கோரி வழக்குகளும்தொடரப்பட்டன.

ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து பலத்தபாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

ஐயப்பன் சிலையை தொட்ட நடிகை-கேரளாவில் சர்ச்சை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X