எதற்கும் தயாராய் நடிகைகள்! தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் எல்லோருமே, எதற்கும் துணிந்தவர்களாகஇருக்கிறார்கள். எப்படிப்பட்ட நிலைக்கும் போக அவர்கள் தயாராக இருக்கிறார்கள்என பிரபல பெண் வழக்கறிஞர் அருள்மொழி கூறியுள்ளார்.சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த தம்பி படத்தின் 110வது நாள் விழாசென்னையில் நடந்து.நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அருள்மொழி படு சூடாகப் பேசினார். குறிப்பாகநடிகைகளை ஒரு பிடி பிடித்தார். அவர் பேசுகையில்,அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆர்ரும், பானுமதியும், மாசிலாஉண்மைக் காதலே என்ற பாட்டில் நடித்தபோது, இருவருமே ஒருவரை ஒருவர்தொட்டுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அது ஒரு அருமையான காதல் டூயட்.இருவரும் ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டுதான் பாடுவார்கள். அந்தப் பாட்டில்பானுமதியின் சேலை லேசாக சரியும். உடனே எம்.ஜி.ஆர். சேலைத் தலைப்பை சரிசெய்வார். அப்படி இருந்தது அன்றைய சினிமா. ஆனால் இன்று அப்படியா உள்ளது?பானுமதியைப் போல ஒரு நடிகையை இன்று பார்க்க முடியுமா? அவரிடம் இருந்தஆளுமைத் திறமை இன்று எந்த நடிகையிடமாவது இருக்கிறதா? எல்லாவற்றுக்கும்தயாராகத்தான் இன்றைய நடிகைகள் உள்ளனர்.பானுமதியைத் தொடாமலேயே நடித்த எம்.ஜி.ஆர். பின்னர் கதாநாயகளின் உடலைகேமராவில் பெரிதாகக் காட்டும்படியான படங்களிலும் நடித்தார். கதை மீது இருந்தநம்பிக்கை சதைக்கு மாறியது. அதே மாதிரிதான் சிவாஜி கணேசனும்.அவரது நடிப்பைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். அப்படிப்பட்டவரையும் கூடபின்னாளில் பெல் பாட்டம் கட்டிவிட்டு ஸ்ரீபிரியாவுடன் சக்குலு லுக்குலு சக்குதுன்னுபாட்டுப் பாட வைத்தார்கள். மீண்டும் அவருடைய பழைய நடிப்பைக் கொண்டு ஒருபாரதிராஜா தேவைப்பட்டார்.தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எப்போதுமே வயதாவதில்லை. இளம்நாயகிகளோடு ஜோடி சேர வேண்டும் என்றால் உடனே இரட்டை வேடத்துக்கு மாறிவிடுகிறார்கள்.ஒருவர் அப்பாவாம், இன்னொருவர் மகனாம். அப்பா வேடத்தல் நடிப்பவர் முன்னணிநடிகையோடு ஜோடி சேருவார். மகனாக வருபவர், புத்தம் புது நாயகியோடு நடிப்பார்.பின்னர் அதே நடிகை, அதே நடிகரின் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பார்.மகன் வேடத்தில் நடிப்பவருக்கு இன்னொரு புதுமுகம்.கதைக்காக ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். கதைக்காக ஏன் அலையவேண்டும்? அவரவர் வீட்டிலேயே நல்ல நல்ல கதைகள் இருக்கிறது. பக்கத்துவீடுகளில் நல்ல கதை இருக்கிறது. அண்ணன், தம்பிகளிடம் கதை இருக்கிறது. அதைவிட்டு விட்டு ரூம் போட்டால்தான் கதை வருமா? வராது, வியாதிதான் வரும்.தில்லாணா மோகனாம்பாள் கதையை அப்படியே மாற்றி எடுக்கப்பட்டகரகாட்டக்காரன் ஓடவில்லையா? திருவிளையாடல் படத்தை இன்றும் கூடபார்க்கலாமே! தெய்வமகனில் பண்டரிபாய் கோவிலில் ஒரு சிவாஜியைப் பார்த்து,அந்தப் பையனைப் பார்க்குபோதெல்லாம் என் அடிவயிறு பதறுதே என்பார்.அப்போது நம் வயிறும் கூட பதறுமே! அதுமாதிரியெல்லாம் ஏன் படம் எடுக்கமறுக்கிறார்கள்! சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில், அப்பாவாக வரும் ராஜ்கிரண்கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கும்போது நமக்கும் வலித்தது.அதனால்தான் அந்தப் படம் ஜெயித்தது.இதோ இங்கே இருக்கிற, கருப்புத் தமிழன் வடிவேலு, இம்சை அரசனில் அருமையாகநடித்துள்ளார். அவரது வசன உச்சரிப்புக்காகத்தான் படம் ஓடுகிறது. ஆனாலும் அவரைஒவ்வொரு படத்திலும் அடிக்கிறார்கள். அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும்விடாமல் அடிக்கிறார்கள்.நல்ல நடிகரை, நல்ல படங்களில் நடிக்க வையுங்கள் என்றார் அருள்மொழி.வடிவேலுவும் ஆவேசம்:நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு,சினிமா என் வீடு. ஆனால் அது இப்போ அசுத்தமாயி கிடக்கிறது. அதை சுத்தம்பண்ண வேண்டியது நம் பொறுப்பு, இப்பல்லாம் என்ன படம் எடுக்கிறார்கள். உயிர்..அப்படின்னு ஒரு படம் எடுத்தவர்கள், இவங்கெல்லாம் அக்கா, தங்கச்சியோடபொறக்கலையா.அண்ணி உறவை பார்த்ததில்லையா? அண்ணி கொழுந்தன் மேல ஆசப்படுறாளாம்,கொழுந்தியா அக்கா புருஷன்மேல ஆசப்படுறாளாம், படமா எடுக்றாய்ங்க. இவுங்களஎல்லாம் தூக்கிப்போட்டு அடிக்கலாம் போல இருக்கு. ஓடவிட்டு உதைக்கணும் போலஇருக்கு.நல்ல குடும்பமா, கூட்டுக் குடும்பமா ஒண்ணுமண்ணா பழகிக்கிட்டிருக்கிறகுடும்பத்துல சபலத்தையும், சந்தேகத்தையும் உண்டாக்குற அளவுக்கு படம்எடுக்கலாமா?ஏன் நல்ல படமே எடுக்க முடியாதா?. இப்ப இம்சை அரசன்னு ஒரு படத்தை நான்கொடுக்கலையா, குழந்தைங்க கொக்கி போட்டு, பெத்தவங்கள கூட்டிக்கிட்டு கொத்துகொத்தா தியேட்டருக்கு போறாங்களே.சினிமால இசட்டுல ஆரம்பிச்சு ஏ வரைக்கும் எல்லாம் பாத்தாச்சு. இப்படி சொன்னா,ஒரு படம் ஜெயிச்ச கொழுப்புல பேசுறான் என்பார்கள். இவனெல்லாம் பேசி நாம்கேட்க வேண்டியிருக்கு என்பார்கள். படத்துல தான் நான் காமெடியான். நிஜத்துலநானும் உங்கள மாதிரி உணர்ச்சியுள்ள மனுஷன் தான்.சினிமால தப்பு தப்பா படம் எடுத்தா தட்டிக் கேட்க ஒரு குழு போடுங்கன்னுஅமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். அப்பதான் இவர்கள் திருந்துவார்கள். இப்பஆட்சிக்கு வந்திருக்கிற கலைஞர் அய்யா இதை செய்யணும்.மாபெரும் நடிகன் சிவாஜிக்கு சிலை வச்சு பெருமைபடுத்தினீங்க. தமிழ் பேரு வச்சாவரி கட்ட வேண்டான்னு சொல்லிட்டிங்க. இப்படி சினிமாவுக்கு நல்லதுசெய்துகொண்டு இருக்கிறீர்கள். இதையும் நீங்கள் செய்ய வேண்டும் என்றார்வடிவேலுநிகழ்ச்சியில் அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு நடிகர், நடிகையருக்குகேடயங்களை வழங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

By Staff
தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் எல்லோருமே, எதற்கும் துணிந்தவர்களாகஇருக்கிறார்கள். எப்படிப்பட்ட நிலைக்கும் போக அவர்கள் தயாராக இருக்கிறார்கள்என பிரபல பெண் வழக்கறிஞர் அருள்மொழி கூறியுள்ளார்.

சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த தம்பி படத்தின் 110வது நாள் விழாசென்னையில் நடந்து.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அருள்மொழி படு சூடாகப் பேசினார். குறிப்பாகநடிகைகளை ஒரு பிடி பிடித்தார். அவர் பேசுகையில்,

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆர்ரும், பானுமதியும், மாசிலாஉண்மைக் காதலே என்ற பாட்டில் நடித்தபோது, இருவருமே ஒருவரை ஒருவர்தொட்டுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அது ஒரு அருமையான காதல் டூயட்.

இருவரும் ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டுதான் பாடுவார்கள். அந்தப் பாட்டில்பானுமதியின் சேலை லேசாக சரியும். உடனே எம்.ஜி.ஆர். சேலைத் தலைப்பை சரிசெய்வார். அப்படி இருந்தது அன்றைய சினிமா. ஆனால் இன்று அப்படியா உள்ளது?

பானுமதியைப் போல ஒரு நடிகையை இன்று பார்க்க முடியுமா? அவரிடம் இருந்தஆளுமைத் திறமை இன்று எந்த நடிகையிடமாவது இருக்கிறதா? எல்லாவற்றுக்கும்தயாராகத்தான் இன்றைய நடிகைகள் உள்ளனர்.

பானுமதியைத் தொடாமலேயே நடித்த எம்.ஜி.ஆர். பின்னர் கதாநாயகளின் உடலைகேமராவில் பெரிதாகக் காட்டும்படியான படங்களிலும் நடித்தார். கதை மீது இருந்தநம்பிக்கை சதைக்கு மாறியது. அதே மாதிரிதான் சிவாஜி கணேசனும்.

அவரது நடிப்பைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். அப்படிப்பட்டவரையும் கூடபின்னாளில் பெல் பாட்டம் கட்டிவிட்டு ஸ்ரீபிரியாவுடன் சக்குலு லுக்குலு சக்குதுன்னுபாட்டுப் பாட வைத்தார்கள். மீண்டும் அவருடைய பழைய நடிப்பைக் கொண்டு ஒருபாரதிராஜா தேவைப்பட்டார்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எப்போதுமே வயதாவதில்லை. இளம்நாயகிகளோடு ஜோடி சேர வேண்டும் என்றால் உடனே இரட்டை வேடத்துக்கு மாறிவிடுகிறார்கள்.

ஒருவர் அப்பாவாம், இன்னொருவர் மகனாம். அப்பா வேடத்தல் நடிப்பவர் முன்னணிநடிகையோடு ஜோடி சேருவார். மகனாக வருபவர், புத்தம் புது நாயகியோடு நடிப்பார்.பின்னர் அதே நடிகை, அதே நடிகரின் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பார்.மகன் வேடத்தில் நடிப்பவருக்கு இன்னொரு புதுமுகம்.

கதைக்காக ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். கதைக்காக ஏன் அலையவேண்டும்? அவரவர் வீட்டிலேயே நல்ல நல்ல கதைகள் இருக்கிறது. பக்கத்துவீடுகளில் நல்ல கதை இருக்கிறது. அண்ணன், தம்பிகளிடம் கதை இருக்கிறது. அதைவிட்டு விட்டு ரூம் போட்டால்தான் கதை வருமா? வராது, வியாதிதான் வரும்.

தில்லாணா மோகனாம்பாள் கதையை அப்படியே மாற்றி எடுக்கப்பட்டகரகாட்டக்காரன் ஓடவில்லையா? திருவிளையாடல் படத்தை இன்றும் கூடபார்க்கலாமே! தெய்வமகனில் பண்டரிபாய் கோவிலில் ஒரு சிவாஜியைப் பார்த்து,அந்தப் பையனைப் பார்க்குபோதெல்லாம் என் அடிவயிறு பதறுதே என்பார்.

அப்போது நம் வயிறும் கூட பதறுமே! அதுமாதிரியெல்லாம் ஏன் படம் எடுக்கமறுக்கிறார்கள்! சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில், அப்பாவாக வரும் ராஜ்கிரண்கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கும்போது நமக்கும் வலித்தது.அதனால்தான் அந்தப் படம் ஜெயித்தது.

இதோ இங்கே இருக்கிற, கருப்புத் தமிழன் வடிவேலு, இம்சை அரசனில் அருமையாகநடித்துள்ளார். அவரது வசன உச்சரிப்புக்காகத்தான் படம் ஓடுகிறது. ஆனாலும் அவரைஒவ்வொரு படத்திலும் அடிக்கிறார்கள். அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும்விடாமல் அடிக்கிறார்கள்.

நல்ல நடிகரை, நல்ல படங்களில் நடிக்க வையுங்கள் என்றார் அருள்மொழி.

வடிவேலுவும் ஆவேசம்:

நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு,

சினிமா என் வீடு. ஆனால் அது இப்போ அசுத்தமாயி கிடக்கிறது. அதை சுத்தம்பண்ண வேண்டியது நம் பொறுப்பு, இப்பல்லாம் என்ன படம் எடுக்கிறார்கள். உயிர்..அப்படின்னு ஒரு படம் எடுத்தவர்கள், இவங்கெல்லாம் அக்கா, தங்கச்சியோடபொறக்கலையா.

அண்ணி உறவை பார்த்ததில்லையா? அண்ணி கொழுந்தன் மேல ஆசப்படுறாளாம்,கொழுந்தியா அக்கா புருஷன்மேல ஆசப்படுறாளாம், படமா எடுக்றாய்ங்க. இவுங்களஎல்லாம் தூக்கிப்போட்டு அடிக்கலாம் போல இருக்கு. ஓடவிட்டு உதைக்கணும் போலஇருக்கு.

நல்ல குடும்பமா, கூட்டுக் குடும்பமா ஒண்ணுமண்ணா பழகிக்கிட்டிருக்கிறகுடும்பத்துல சபலத்தையும், சந்தேகத்தையும் உண்டாக்குற அளவுக்கு படம்எடுக்கலாமா?

ஏன் நல்ல படமே எடுக்க முடியாதா?. இப்ப இம்சை அரசன்னு ஒரு படத்தை நான்கொடுக்கலையா, குழந்தைங்க கொக்கி போட்டு, பெத்தவங்கள கூட்டிக்கிட்டு கொத்துகொத்தா தியேட்டருக்கு போறாங்களே.

சினிமால இசட்டுல ஆரம்பிச்சு ஏ வரைக்கும் எல்லாம் பாத்தாச்சு. இப்படி சொன்னா,ஒரு படம் ஜெயிச்ச கொழுப்புல பேசுறான் என்பார்கள். இவனெல்லாம் பேசி நாம்கேட்க வேண்டியிருக்கு என்பார்கள். படத்துல தான் நான் காமெடியான். நிஜத்துலநானும் உங்கள மாதிரி உணர்ச்சியுள்ள மனுஷன் தான்.

சினிமால தப்பு தப்பா படம் எடுத்தா தட்டிக் கேட்க ஒரு குழு போடுங்கன்னுஅமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். அப்பதான் இவர்கள் திருந்துவார்கள். இப்பஆட்சிக்கு வந்திருக்கிற கலைஞர் அய்யா இதை செய்யணும்.

மாபெரும் நடிகன் சிவாஜிக்கு சிலை வச்சு பெருமைபடுத்தினீங்க. தமிழ் பேரு வச்சாவரி கட்ட வேண்டான்னு சொல்லிட்டிங்க. இப்படி சினிமாவுக்கு நல்லதுசெய்துகொண்டு இருக்கிறீர்கள். இதையும் நீங்கள் செய்ய வேண்டும் என்றார்வடிவேலு

நிகழ்ச்சியில் அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு நடிகர், நடிகையருக்குகேடயங்களை வழங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X