»   »  நடிகர் சங்கத்தில்நோ-பாலிடிக்ஸ்: சரத்குமார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். தலைவராக சரத்குமார், பொதுச் செயலராக ராதாரவி, துணைத் தலைவர்களாகமனோரமா, விஜயகுமார், பொருளாளராக கே.என்.காளை மற்றும் செயற்குழுஉறுப்பினர்களாக சத்யராஜ், முரளி, சார்லி, அப்பாஸ், சிலம்பரசன், அலெக்ஸ்,நடிகைகள் ஸ்ரீப்ரியா,மும்தாஜ், விந்தியா, பசி சத்யா உட்பட 24 பேர் பதவி ஏற்றனர்.நியமன துணை செயலராக எஸ்.எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில்,சங்கக் கடன் விஜயகாந்த் தலைமையிலான நிர்வாகிகள் மூலம் அடைக்கப்பட்டது.நடிகர், நடிகைகள் ஒத்துழைப்புடன் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு கிடைத்தவருவாயில் கடன் அடைக்கப்பட்டது. அதற்காக நடிகர், நடிகைகளுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.சங்கத்தின் பக்கம் வராதவர்களுக்கு கூட பிரச்னை வரும் போது அவர்கள் சங்கஉறுப்பினர் என்பதால் அவர்களுக்காக சங்கம் ஓடிச் சென்று உதவி செய்திருக்கிறது.இதனை உணர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்திற்கு வந்து செல்ல வேண்டும்.எந்த நேரத்திலும் சங்கத்திற்கு வந்து பிரச்னையை தெரிவிக்கலாம். சங்கம் அதை தீர்த்துவைக்கும். சங்கத்திற்கு வராதவர்களும் இனி சங்கத்திற்கு வருவார்கள் எனநினைக்கிறேன்.இப்போது சங்கத்திற்கு ரூ. 1.65 கோடி இருப்பு உள்ளது. புதிதாக 6 மாடிக் கட்டடம்கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஜேப்பியார் இரண்டு கோடி ரூபாய் தந்துஉதவுவார் என்று எதிர்பார்க்கிறோம்.புதிய கட்டடத்தில் திரைப்பட நூலகம் அமைக்கப்படும். வெளியூரிலிருந்து சென்னைவரும் கலைஞர்கள் தங்கிக் கொள்ள குறைந்த கட்டணத்தில் தங்கும் அறை வசதிசெய்யப்படும். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நடிகர்சங்க நாடகக் குழு உருவாக்கப்படும். இந்த குழு மூலம் மாதத்திற்கு 4 நாடகங்கள்நடத்தப்படும்.நடிகர் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் முக்கிய பதவியில்இருக்கின்றனர் என்று பேசப்படுகிறது. பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும்.பல்வேறு அரசியல் கட்சியினர் நடிகர் சங்கத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் நடிகர்சங்கத்தில் அரசியல் இருக்காது. உள்ளே அரசியலை வர விடவும் மாட்டேன்.நடிகர், நடிகைகளை கொச்சைப்படுத்தி எழுதுவதை பத்திரிக்கைகள் விட்டுவிடவேண்டு என்றார்.விஜயகாந்த் பேகையில், 6 வருடங்கள் நான் சங்கத்தின் தலைவராக இருந்தேன். வங்கிகடனை அடைத்தேன். 1 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு வைத்துவிட்டுப்போகிறேன்.புதிய தலைவராக சரத்குமார் வந்திருக்கிறார். என்னுடன் பொதுச் செயலாளராகஇருந்தால் சங்கத்தின் பிரச்னைகள் என்னென்ன, தேவைகள் என்னென்ன, என்பதைநன்கு தெரிந்து வைத்துள்ளார்.சங்கத்தில் நான் பதவியில் இல்லாவிட்டாலும் ஒரு உறுப்பினர் என்ற முறையில்சங்கத்திற்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்சார்பில் அதன் தலைவர் ராம.நாராயணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

நடிகர் சங்கத்தில்நோ-பாலிடிக்ஸ்: சரத்குமார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். தலைவராக சரத்குமார், பொதுச் செயலராக ராதாரவி, துணைத் தலைவர்களாகமனோரமா, விஜயகுமார், பொருளாளராக கே.என்.காளை மற்றும் செயற்குழுஉறுப்பினர்களாக சத்யராஜ், முரளி, சார்லி, அப்பாஸ், சிலம்பரசன், அலெக்ஸ்,நடிகைகள் ஸ்ரீப்ரியா,மும்தாஜ், விந்தியா, பசி சத்யா உட்பட 24 பேர் பதவி ஏற்றனர்.நியமன துணை செயலராக எஸ்.எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில்,சங்கக் கடன் விஜயகாந்த் தலைமையிலான நிர்வாகிகள் மூலம் அடைக்கப்பட்டது.நடிகர், நடிகைகள் ஒத்துழைப்புடன் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு கிடைத்தவருவாயில் கடன் அடைக்கப்பட்டது. அதற்காக நடிகர், நடிகைகளுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.சங்கத்தின் பக்கம் வராதவர்களுக்கு கூட பிரச்னை வரும் போது அவர்கள் சங்கஉறுப்பினர் என்பதால் அவர்களுக்காக சங்கம் ஓடிச் சென்று உதவி செய்திருக்கிறது.இதனை உணர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்திற்கு வந்து செல்ல வேண்டும்.எந்த நேரத்திலும் சங்கத்திற்கு வந்து பிரச்னையை தெரிவிக்கலாம். சங்கம் அதை தீர்த்துவைக்கும். சங்கத்திற்கு வராதவர்களும் இனி சங்கத்திற்கு வருவார்கள் எனநினைக்கிறேன்.இப்போது சங்கத்திற்கு ரூ. 1.65 கோடி இருப்பு உள்ளது. புதிதாக 6 மாடிக் கட்டடம்கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஜேப்பியார் இரண்டு கோடி ரூபாய் தந்துஉதவுவார் என்று எதிர்பார்க்கிறோம்.புதிய கட்டடத்தில் திரைப்பட நூலகம் அமைக்கப்படும். வெளியூரிலிருந்து சென்னைவரும் கலைஞர்கள் தங்கிக் கொள்ள குறைந்த கட்டணத்தில் தங்கும் அறை வசதிசெய்யப்படும். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நடிகர்சங்க நாடகக் குழு உருவாக்கப்படும். இந்த குழு மூலம் மாதத்திற்கு 4 நாடகங்கள்நடத்தப்படும்.நடிகர் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் முக்கிய பதவியில்இருக்கின்றனர் என்று பேசப்படுகிறது. பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும்.பல்வேறு அரசியல் கட்சியினர் நடிகர் சங்கத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் நடிகர்சங்கத்தில் அரசியல் இருக்காது. உள்ளே அரசியலை வர விடவும் மாட்டேன்.நடிகர், நடிகைகளை கொச்சைப்படுத்தி எழுதுவதை பத்திரிக்கைகள் விட்டுவிடவேண்டு என்றார்.விஜயகாந்த் பேகையில், 6 வருடங்கள் நான் சங்கத்தின் தலைவராக இருந்தேன். வங்கிகடனை அடைத்தேன். 1 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு வைத்துவிட்டுப்போகிறேன்.புதிய தலைவராக சரத்குமார் வந்திருக்கிறார். என்னுடன் பொதுச் செயலாளராகஇருந்தால் சங்கத்தின் பிரச்னைகள் என்னென்ன, தேவைகள் என்னென்ன, என்பதைநன்கு தெரிந்து வைத்துள்ளார்.சங்கத்தில் நான் பதவியில் இல்லாவிட்டாலும் ஒரு உறுப்பினர் என்ற முறையில்சங்கத்திற்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்சார்பில் அதன் தலைவர் ராம.நாராயணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

தலைவராக சரத்குமார், பொதுச் செயலராக ராதாரவி, துணைத் தலைவர்களாகமனோரமா, விஜயகுமார், பொருளாளராக கே.என்.காளை மற்றும் செயற்குழுஉறுப்பினர்களாக சத்யராஜ், முரளி, சார்லி, அப்பாஸ், சிலம்பரசன், அலெக்ஸ்,நடிகைகள் ஸ்ரீப்ரியா,மும்தாஜ், விந்தியா, பசி சத்யா உட்பட 24 பேர் பதவி ஏற்றனர்.நியமன துணை செயலராக எஸ்.எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில்,சங்கக் கடன் விஜயகாந்த் தலைமையிலான நிர்வாகிகள் மூலம் அடைக்கப்பட்டது.நடிகர், நடிகைகள் ஒத்துழைப்புடன் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு கிடைத்தவருவாயில் கடன் அடைக்கப்பட்டது. அதற்காக நடிகர், நடிகைகளுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கத்தின் பக்கம் வராதவர்களுக்கு கூட பிரச்னை வரும் போது அவர்கள் சங்கஉறுப்பினர் என்பதால் அவர்களுக்காக சங்கம் ஓடிச் சென்று உதவி செய்திருக்கிறது.இதனை உணர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

எந்த நேரத்திலும் சங்கத்திற்கு வந்து பிரச்னையை தெரிவிக்கலாம். சங்கம் அதை தீர்த்துவைக்கும். சங்கத்திற்கு வராதவர்களும் இனி சங்கத்திற்கு வருவார்கள் எனநினைக்கிறேன்.

இப்போது சங்கத்திற்கு ரூ. 1.65 கோடி இருப்பு உள்ளது. புதிதாக 6 மாடிக் கட்டடம்கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஜேப்பியார் இரண்டு கோடி ரூபாய் தந்துஉதவுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

புதிய கட்டடத்தில் திரைப்பட நூலகம் அமைக்கப்படும். வெளியூரிலிருந்து சென்னைவரும் கலைஞர்கள் தங்கிக் கொள்ள குறைந்த கட்டணத்தில் தங்கும் அறை வசதிசெய்யப்படும்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நடிகர்சங்க நாடகக் குழு உருவாக்கப்படும். இந்த குழு மூலம் மாதத்திற்கு 4 நாடகங்கள்நடத்தப்படும்.

நடிகர் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் முக்கிய பதவியில்இருக்கின்றனர் என்று பேசப்படுகிறது. பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும்.பல்வேறு அரசியல் கட்சியினர் நடிகர் சங்கத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் நடிகர்சங்கத்தில் அரசியல் இருக்காது. உள்ளே அரசியலை வர விடவும் மாட்டேன்.

நடிகர், நடிகைகளை கொச்சைப்படுத்தி எழுதுவதை பத்திரிக்கைகள் விட்டுவிடவேண்டு என்றார்.

விஜயகாந்த் பேகையில், 6 வருடங்கள் நான் சங்கத்தின் தலைவராக இருந்தேன். வங்கிகடனை அடைத்தேன். 1 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு வைத்துவிட்டுப்போகிறேன்.

புதிய தலைவராக சரத்குமார் வந்திருக்கிறார். என்னுடன் பொதுச் செயலாளராகஇருந்தால் சங்கத்தின் பிரச்னைகள் என்னென்ன, தேவைகள் என்னென்ன, என்பதைநன்கு தெரிந்து வைத்துள்ளார்.

சங்கத்தில் நான் பதவியில் இல்லாவிட்டாலும் ஒரு உறுப்பினர் என்ற முறையில்சங்கத்திற்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்சார்பில் அதன் தலைவர் ராம.நாராயணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil