twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொழிலுக்கு திரும்பிய நட்சத்திரங்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சினிமா நட்சத்திரங்கள்அனைவரும் மீண்டும் படப் பிடிப்புகளுக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.வழக்கமாகவே தேர்தல் நேரத்தில் கோடம்பாக்கம் ரெஸ்ட் மோடுக்குப் போய்விடும்.இது காலங்காலமாகவே நடக்கும் விஷயம்.அதுவும் இம்முறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் நடிகர், நடிகையர்உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அதிமுக சார்பில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் பிரசாரக் களத்தைக் கலக்கியதால்பிரசாரம் படு சூடாக இருந்தது. தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் பெரும்பாலான நடிகர், நடிகையர் மீண்டும்தங்களது தொழிலைப் பார்க்க கிளம்பி விட்டனர்.நடிகர்கள் சரத்குமார், முரளி, செந்தில், கோவை சரளா, விஜயக்குமார், விந்தியாஉள்ளிட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.எம்.பி.எஸ்.எஸ்.சந்திரன் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிபோய் விட்டார். நெப்போலியனும் நடிக்கப் போய் விட்டார். இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் தனதுவீராசாமி படத்தின் சில காட்சிகளை படமாக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாகஇறங்கியுள்ளார்.பாக்யராஜ், தனது மகள் சரண்யா நடித்துள்ள பாரிஜாதம் படத்தின் ரிலீஸ் வேலைகளில்மும்முரமாகியுள்ளார். மகன் சாந்தனு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்தும்அக்கறை காட்டத் தொடங்கியுள்ளார். சரத்குமார் தனது 100வது படமான தலைமகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளஆரம்பித்துள்ளார். பார்வர்ட் பிளாக் தலைவராகியுள்ள கார்த்திக்கும் கூட மீண்டும்படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார். இவர்களில் விஜயகாந்த் மட்டும்தான் இன்னும் சினிமாப் பக்கம் தனது கவனத்தைத்திருப்பவில்லை. விருத்தாச்சலம் முடிவையும், தனது கட்சியின் எதிர்காலத்தையும்அறிந்து கொள்ளும் ஆவலில் அவர் இருக்கிறார். சான்ஸ் ஏதும் இல்லாமல் வழக்கமாகவே சும்மா இருக்கும் எஸ்.வி. சேகர் இப்போதும்சும்மாவே இருக்கிறார்.. நாளைய தேர்தல் முடிவை மட்டும் எதிர்நோக்கியபடி. டமில் பேசி ஒட் கேட்ட சிம்ரன் தனது குழந்தை, கணவருடன் டெல்லிப் பக்கம் கிளம்பிவிட்டார்.

    By Staff
    |


    அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சினிமா நட்சத்திரங்கள்அனைவரும் மீண்டும் படப் பிடிப்புகளுக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

    வழக்கமாகவே தேர்தல் நேரத்தில் கோடம்பாக்கம் ரெஸ்ட் மோடுக்குப் போய்விடும்.இது காலங்காலமாகவே நடக்கும் விஷயம்.

    அதுவும் இம்முறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் நடிகர், நடிகையர்உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அதிமுக சார்பில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் பிரசாரக் களத்தைக் கலக்கியதால்பிரசாரம் படு சூடாக இருந்தது.


    தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் பெரும்பாலான நடிகர், நடிகையர் மீண்டும்தங்களது தொழிலைப் பார்க்க கிளம்பி விட்டனர்.

    நடிகர்கள் சரத்குமார், முரளி, செந்தில், கோவை சரளா, விஜயக்குமார், விந்தியாஉள்ளிட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

    எம்.பி.எஸ்.எஸ்.சந்திரன் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிபோய் விட்டார்.

    நெப்போலியனும் நடிக்கப் போய் விட்டார். இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் தனதுவீராசாமி படத்தின் சில காட்சிகளை படமாக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாகஇறங்கியுள்ளார்.

    பாக்யராஜ், தனது மகள் சரண்யா நடித்துள்ள பாரிஜாதம் படத்தின் ரிலீஸ் வேலைகளில்மும்முரமாகியுள்ளார். மகன் சாந்தனு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்தும்அக்கறை காட்டத் தொடங்கியுள்ளார்.

    சரத்குமார் தனது 100வது படமான தலைமகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளஆரம்பித்துள்ளார். பார்வர்ட் பிளாக் தலைவராகியுள்ள கார்த்திக்கும் கூட மீண்டும்படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.


    இவர்களில் விஜயகாந்த் மட்டும்தான் இன்னும் சினிமாப் பக்கம் தனது கவனத்தைத்திருப்பவில்லை. விருத்தாச்சலம் முடிவையும், தனது கட்சியின் எதிர்காலத்தையும்அறிந்து கொள்ளும் ஆவலில் அவர் இருக்கிறார்.

    சான்ஸ் ஏதும் இல்லாமல் வழக்கமாகவே சும்மா இருக்கும் எஸ்.வி. சேகர் இப்போதும்சும்மாவே இருக்கிறார்.. நாளைய தேர்தல் முடிவை மட்டும் எதிர்நோக்கியபடி.

    டமில் பேசி ஒட் கேட்ட சிம்ரன் தனது குழந்தை, கணவருடன் டெல்லிப் பக்கம் கிளம்பிவிட்டார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X