சிந்துசமவெளி டூ ஆடை… பர்த்டே பேபி அமலா பால்… ஸ்பெஷல் ஸ்டோரி !

சென்னை : அமலா பால் அறிமுகம் ஆன முதல் படமே சர்ச்சை படம் என்பதாலோ என்னவோ அமலா பால் என்றாலே சர்ச்சை என ஒரு விமர்சனம் சினிமா வட்டாரத்தில் நிலவி வருகிறது.

காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்று சொல்வார்கள் அதுபோலத்தான் அமலா பாலும்..... சிந்து சமவெளி கதாபாத்திரம் ஆகட்டும், ஆடை கதாபாத்திரம் ஆகட்டும் மிரட்டி இருப்பார்.. அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க நடிக்க உண்மையில் கெத் வேணும்... அதை அசால்டாக செய்து முடித்து இருப்பார் அமலா பால்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அமலா பால் பற்றி ஒரு ஸ்பெஷல் ரவுண்டப்...

கேரளத்து பொண்ணு

கேரளத்து பொண்ணு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பால் வர்கீஸ் மற்றும் அன்னிஸ் பால் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் அமலா பால். ஆலுவாவிலுள்ள பள்ளிப்படிப்பை முடித்த அமலா பால், கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.

அறிமுகம்

அறிமுகம்

இதையடுத்து நீலத்தாமரை என்ற மலையாள திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இதன்பின்னர் சிந்துசமவெளி திரைப்படத்தில், ஒருவிதமான சர்ச்சை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தோல்வித் திரைப்படமாக அமைந்தது.

மைனா

மைனா

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பட்டி தொட்டி எங்கும் நட்சத்திரமாக மின்னினார் அமலா பால்.

விவாகரத்து

விவாகரத்து

தெய்வ திருமகள் நடித்த அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் வயப்பட்டார். இதையடுத்து, அவர் இருவரும் 2014 அன்று திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகன் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இந்தஜோடி கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பல படங்களில்

பல படங்களில்

விவாகரத்துக்கு பின் வேலையில்லாபட்டதாரி 2, திருட்டு பயலே 2, ஆடை, ராட்சசன் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் ஒரு சில காட்சிகளில் நடித்தால் சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கைவசம் படம்இல்லை

கைவசம் படம்இல்லை

இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிடும் அமலாபால் ஒரு படி மேலே சென்று ... ஆண் நண்பர்களுடன் சரக்கடிக்கும் வீடியோவையும் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் மக சுளிப்புக்கு ஆளானார். தற்போது எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்க தயாராக உள்ள அமலா பாலுக்கு கைவசம் அதோ அந்த பறவைப்போல படம் மட்டுமே ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அமலா பாலுக்கு ரசிகர்கள், நெருங்கி நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X