தமிழுக்கு வரும் கேரளத்து அஞ்சனா தம்புராட்டி

By Sudha

Sabash Sariyana Potti Movie
டிவி சீரியல் நடிகரான வேணு அரவிந்த் திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் முதல் படமான சபாஷ் சரியான போட்டி படத்தில் கேரளாவைச் சேர்ந்த அஞ்சனா தம்புராட்டி நாயகியாக நடிக்கிறார்.

கே.பாலச்சந்தர் மூலம் டிவி நடிகராக அறிமுகமானவர் வேணு அரவிந்த். ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநராகி விட்டார்.

அவர் இயக்கும் சபாஷ் சரியான போட்டி படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும், அஞ்சனா தம்புராட்டி நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் தவிர ஜெயராம், டெல்லி கணேஷ், வையாபுரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நாயகி அஞ்சனா தம்புராட்டி, கேரள ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவராம். தமிழில் நாயகியாக அறிமுகமாகி சினிமா நடிகையாகியுள்ளார்.

சபாஷ் சரியான போட்டி முழுக்க முழுக்க காமெடி கதை. ஒரு கனவை துரத்தும் நிஜத்தின் கதை. நடிகனுக்கும், அவனது தீவிர ரசிகனுக்கும் இடையேயான அன்பை, ஆக்ரோஷத்தை காமெடி கதையாக உருவாக்கி இருக்கிறேன் என்கிறார் வேணு அரவிந்த்.

படத்திற்கு இசையமைக்கிறார் தமன். நா.முத்துக்குமார், காதல் மதி உள்ளிட்டோர் பாடல்களைப் புனைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X