உண்மையான காதலை இழந்தது வலிக்கிறது.. மஞ்சு வாரியரின் முன்னால் கணவர் என்ன இப்படி சொல்றாரு!
கொச்சி: மலையாள சினிமாவின் மூத்த நடிகரான திலீப், குடும்ப ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்தமானவர். ஆனால், அவரது முதல் மனைவி மஞ்சு வாரியருடனான விவாகரத்து, பின்னர் நடிகை காவ்யா மாதவனுடனான திருமணம், மற்றும் நடிகை மீதான தாக்குதல் வழக்கில் அவர் சந்தேகத்தின் நிழலில் சிக்கியது ஆகியவை திலீப்பின் மக்கள் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தின. திலீப்பின் தனிப்பட்ட வாழ்க்கையும் காதல் விவகாரங்களும் இன்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளன. தனது வாழ்க்கையில் மிகவும் விரும்பிய உண்மையான காதலை இழந்ததாக திலீப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜிஞ்சர் மீடியா என்டர்டெயின்மென்ட்டுக்கு அளித்த பேட்டியில் திலீப் பேசுகையில், "உண்மையான காதலில் தோல்வியடைந்தவன் நான். மற்றவை எல்லாம் ஒரு முதல் காதல், ஈர்ப்பு, இப்படியானவை தானே. ஆனால் உண்மையான காதலுக்கு செல்லும்போது, அது ஒரு வலியாக மாறி, தொடர்ந்து கொண்டே இருக்கிறது," என்று கூறினார்.

காதல் தோல்வி: தொடர்ந்து பேசிய அவர், "இப்போதும் அப்படித்தான். காதலில் தோல்வியடையும்போது, அதை இழக்கும்போது, அது ஒரு வலியாகவே இருக்கும். அந்த வலியிலிருந்து தப்பிக்க, சில சமயங்களில் நாம் மற்றொரு காதலில் விழுவோம். சிலவற்றுக்கு மாற்றாக எதுவும் இல்லை. இன்னொரு காதல் வரும்போது இதை மறந்துவிடலாம் என்று சொல்ல முடியாது. அங்கு வெறும் சமரசம் மட்டுமே இருக்கும். அவை ஒப்பிட முடியாதவை," என்று திலீப் விளக்கினார்.
மஞ்சு வாரியர்: திலீப் அந்த பேட்டியில் யாரைக் கூறுகிறார் என்று குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது இந்த பேச்சு அவரது ரசிகர்களை பல்வேறு யூகங்களுக்கு உள்ளாக்கியது. மஞ்சு வாரியர் தனது வாழ்க்கையிலிருந்து விலகியதற்கு வருத்தம் இருப்பதாக அவரது வார்த்தைகளில் இருந்ததாக சிலர் கூறினர். ஆனால், மற்றவர்கள் இதை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர். மஞ்சுவை திருமணம் செய்வதற்கு முன்பு, திலீப்புக்கு ஒரு உறவினருடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த உறவைப் பற்றியே அவர் பேசியிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திலீப் - மஞ்சு: தற்போது திலீப் மனைவி காவ்யா மாதவனுடன் சென்னையில் வசித்து வருகிறார். மூத்த மகள் மீனாக்ஷியின் மருத்துவக் கல்விக்காக அவர்கள் சென்னையில் தங்கி உள்ளனர். படப்பிடிப்புக்காக மட்டுமே திலீப் கேரளாவுக்குச் சென்று வருகிறார். அதே நேரம், மஞ்சு வாரியர் சினிமாவில் மீண்டும் நுழைந்த பிறகு பல உயரங்களைத் தொட்டுள்ளார். மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த அசுரன், விடுதலை போன்ற படங்கள் அவரது திரை வாழ்க்கையில் என்றும் மிளிரும் வைரங்கள். மேலும், விரைவில் இந்தி சினிமாவிலும் மஞ்சு அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











