நகைச்சுவையில் வடிவேலுவையே ஆச்சர்யப்பட வைத்த நடிகை நளினி... சென்னையில் லண்டன் நினைவுகள்
சென்னை: நடிகர் வடிவேலுவுடன் நடிப்பதற்கு நகைச்சுவை நடிகைகள் மட்டுமின்றி பழைய படங்களில் கதாநாயகிகளாக நடித்தவர்களும் விருப்பப்படுவார்கள்.
எண்பதுகளில் கதாநாயகிகளாக கொடிகட்டி பறந்த அம்பிகா, நளினி உள்ளிட்டோரும் மும்தாஜ் போன்ற நடிகைகளும் அவருடன் ஜோடியாக நடித்துள்ளதுள்ளார்கள்.
இந்நிலையில் லண்டன் படத்தில் அவருடன் நடித்த நளினி அந்த படம் குறித்த சுவாரசியமான சில தகவல்களை கூறியுள்ளார்.

வின்னர்
நகைச்சுவை படங்களுக்கே பெயர் போன இயக்குனர் சுந்தர் சி கமல், ரஜினி, அஜித் என்று பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்திருந்தாலும் நகைச்சுவை நடிகர்களாக கவுண்டமணி, செந்தில் மற்றும் விவேக் ஆகியோரைதான் தனது படங்களில் நடிக்க வைத்தார். கிட்டத்தட்ட அவர் இயக்குநராகி 8 ஆண்டுகள் கழித்துதான் வின்னர் படத்தில் முதன்முதலாக வடிவேலு அவர் இயக்கத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே லேண்ட் மார்க் படமாக அமைந்துவிட்டது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது மட்டுமல்ல எப்போதும் அந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழிக்க முடியாதவையாக இருக்கும். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி, பிரசாந்த் மற்றும் வடிவேலு கூட்டணி இணைந்த திரைப்படம்தான் லண்டன்.

லண்டன்
காக்கா குயில் என்ற மோகன்லால் நடித்திருந்த மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் லண்டன். பெரும்பாலான படப்பிடிப்பு லண்டனிலும் கொஞ்சம் சென்னையிலும் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நளினி மட்டுமின்றி மும்தாஜுடனும் கூட்டணி அமைத்து நகைச்சுவை காட்சிகளில் கலக்கி இருப்பார் வடிவேலு.

நடிப்பதற்கு வந்த வாய்ப்பு
முதன் முதலில் இயக்குனர் சுந்தர் சி நளினியிடம் இந்த கதையை கூறிய போது அவ்வளவு பெரிய நகைச்சுவை ஜாம்பவானுடன் தன்னால் எப்படி நடிக்க முடியும் என்று நளினி யோசித்தாராம். அதன் பின்னர் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சுந்தர் சி வலியுறுத்தவே அதில் ஒப்பந்தமானார். ஆனால் அப்போது தன் பிள்ளைகள் வளரும் பருவத்தில் இருந்ததால் தன்னால் லண்டன் வர முடியாது என்று நளினி கூறவே, அவருடைய பகுதிகளில் சென்னையில் படம்பிடித்தார்கள் படக் குழுவினர்.

பாராட்டுகள்
முதல் நாள் நடித்து முடித்த போது,"அவ்வளவு பெரிய கதாநாயகியாக இருந்த நீங்கள் நகைச்சுவை காட்சிகளிலும் பிரம்மாதமாக நடிக்கிறீர்கள்" என்று வடிவேலு பாராட்டியதாகவும். அவர் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் தன்னை பாராட்டியதாகவும் நளினி கூறியுள்ளார். வடிவேலும் மீண்டும் நடிக்க வந்ததை தான் வரவேற்பதாகவும், அவருடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதற்காகவும், இதுவரை தான் செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு வடிவேலுதான் ஆசான் என்றும் நளினி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











