மாயாவதி பேசும் ஸ்டைலை காப்பி அடித்த நேஹா தூபியா
பஸ் கயே ஒபாமா என்ற படத்தில் கொள்ளைக்காரி வேடத்தில் நடிக்கும் பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி நேஹா தூபியா, இப்படத்தில் தான் பேசும் வசன உச்சரிப்புக்கு, உ.பி. முதல்வர் மாயாவதியை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உ.பி. இந்தியை மிகச் சரியாக பேசுபவர் மாயாவதி மட்டுமே. எனவேதான் அவரது உச்சரிப்பு ஸ்டைலை நான் இப்படத்தில் பயன்படுத்தி பேசியுள்ளேன்.
முதலில் இந்தப் பேச்சை பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். இருப்பினும் தொடர்ந்து மாயாவதியின் பேச்சைக் கூர்ந்து கவனித்து முயன்றதால் பேச வந்தது.
எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் டெல்லியில் கழித்துள்ளதால் எனக்கு இந்தி நன்றாக வரும். அதேசமயம், உ.பி.யில் பேசுவதைப் போன்ற உச்சரிப்பு வராது. இதற்காகவே மாயாவதியின் பேச்சைக் கூர்ந்து கவனித்துப் பேசி நடித்துள்ளேன் என்றார் நேஹா.
30 வயதாகும் நேஹா, இப்படத்தில் முன்னி மேடம் என்ற கேரக்டரில் பயங்கரக் கொள்ளைக்காரியாக நடித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











