டாய்லெட்டுக்குள் நுழைந்து ப்ரீத்தி ஜிந்தாவை படம் பிடித்த ரசிகைகள்

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் படபடப்போடு எழுதியுள்ளார் ப்ரீத்தி.
அதில், நான் எப்போதுமே ரசிகர்களை மதிப்பவள். அவர்களை விரும்புகிறேன். அதை நான் மறைத்ததே இல்லை. ஆனால் நான் கழிப்பறைக்குச் செல்லும்போது பெண்கள் சிலர் கேமராவுடன் வந்து படம் பிடித்தபோது அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
பாத்ரூமுக்குள் கேமராவுடன் வந்து படம் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சற்று எரிச்சலுடனேயே கேட்டுள்ளார் ப்ரீத்தி.
சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் பிரபலமாகி வரும் நடிகை ப்ரீதா பின்டோ கூட இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கழிப்பறைக்குள் அவர் போனபோது சிலர் படம் எடுத்து விட்டார்களாம்.
ரசிகர்களே உங்க வெறித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா
Comments
actress preity zinta டாய்லெட் நடிகை பாலிவுட் ப்ரீத்தி ஜிந்தா ரசிகைகள் bollywood clicking fans toilet


Click it and Unblock the Notifications