புடவை கட்ட கூட இவங்க தான் சொல்லிக்கொடுத்தாங்க.. யாரை சொல்கிறார் நடிகை குஷ்பு?
சென்னை: 80 மற்றும் 90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை குஷ்பு, வருஷம் 16, வெற்றி விழா, பாட்டுக்கு நான் அடிமை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார்.
சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு உதவியவர்கள் பற்றியும், தனக்கு புடவை கட்ட கூட சொல்லிக்கொடுத்தவர்கள் பற்றியும் மனம் திறந்து திறந்து கூறியுள்ளார்.
இன்றும் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார் நடிகை குஷ்பு.

ஹிந்தி தான் தொடக்கம்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. ஆரம்ப காலத்தில் ஹிந்தியில் நடித்துக் கொண்டிருந்த நடிகை குஷ்புவிற்கு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிகாந்த், பிரபு,சுகாசினி போன்ற பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

தொடர்ந்து வெற்றி
வருஷம் 16, வெற்றி விழா, பாட்டுக்கு நான் அடிமை, கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னதம்பி போன்ற படங்களில் நடித்து தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். சின்ன தம்பி படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, விஜயகாந்த், பாக்யராஜ், ராம்கி, சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சிம்ம ராசி, நாட்டாமை, மலபார் போலீஸ், போன்ற பல பிளாக் பஸ்டர் படங்களையும் கொடுத்துள்ளார் .

முன்னணி நடிகைகளுடன் கூட்டணி
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் முன்னணியாக வலம் வந்தார் குஷ்பு. பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்பு இன்றும் இளமை தோற்றத்துடன் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
ஒரு முன்னணி நடிகையாக இருப்பதற்கு ஒல்லி தோற்றம் இருக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில் பப்லியான தோற்றத்திலும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகை குஷ்பு.

சொல்லி கொடுத்தாங்க
அந்த காலகட்டத்தில் நடிகை ராதிகா, ஊர்வசி, சுகாசினி, நிரோஷா போன்ற பலரும் முன்னணி நடிகைகளாக இருந்தனர். சினிமாவுக்கு வந்த சமயத்தில் அவர்கள் தான் தனக்கு உதவியதாக பல முறை நடிகை குஷ்பு கூறியதுண்டு. புடவை கட்ட கூட எனக்கு தெரியாது, ராதிகா தான் எனக்கு புடவை கட்ட சொல்லி கொடுத்தார் என்றும், அன்று முதல் இன்று வரை அவர் கூறியதை தான் ஃபாலோ செய்வதாகவும் கூறியுள்ளார் நடிகை குஷ்பு. தனியாக இருக்கும் பொழுது யாரையும் நீ எதிர்பார்க்கக் கூடாது என்று கூறினார் ராதிகா. அவர்கள் எனக்கு சீனியராக இருந்தாலும் என்னுடன் நன்றாக பழகி எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பு.


Click it and Unblock the Notifications











