உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா “ராஜமாதா“… இன்னும் அப்படியே இருக்கீங்க!

சென்னை: வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகல என்ற டையலாக்கை பேசி மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்துவிட்டார் ரம்யா கிருஷ்ணன்.

Recommended Video

Ramyakrishnan 51st Birthday Celebration | ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்

கதாநாயகி, துணை நடிகை, வில்லி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி எடுத்துவிடுவதுதான் ரம்யாகிருஷ்ணனின் ஸ்பெஷல்.

இன்று ரம்யா கிருஷ்ணன் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

14வயதில் திரைப்பயணம்

14வயதில் திரைப்பயணம்

குச்சுப்புடி நடனக்கலைஞரான நடிகை ரம்யா கிருஷ்ணன்14 வயதில் தனது கலைப்பயணத்தை தொடங்கினார். இவர் முதன்முறையாக ஒய்.ஜி.மகேந்திரனுடன் வெள்ளை மனசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து, படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஆட்டமா தேரோட்டமா

ஆட்டமா தேரோட்டமா

ரம்யா கிருஷ்ணனையும் அவரது ஆட்டத்தையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேப்டன் பிரபாகரன். இந்த திரைப்படத்தில் ஆட்டமா... தேரோட்டமா பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்று வரை அனைவரையும் ஆடவைத்து வருகிறது. அவரின் டான்ஸ் அவ்வளவு சூப்பரா இருக்கும்.

தெலுங்கில் பிரபலம்

தெலுங்கில் பிரபலம்

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். தெலுங்கில், இவர் நாகார்ஜூனாவுடன் நடித்த அன்னமய்யா திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தது. இதில் ரம்யாவின் நடிப்பும் பெரிதாகப் பாராட்டப்பட்டது.

இந்தியிலும்

இந்தியிலும்

அதேபோல இந்தியில் கல்நாயக் முக்கியமான படமாக அமைந்தது. அதுவரையிலான இந்தி சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றாக அமைந்தது. அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த படே மியான் சோட்டே மியான் 1998-ல் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

அம்மன் அவதாரம்

அம்மன் அவதாரம்

அம்மன் திரைப்படத்தில் அம்மன் அவதாரம் எடுத்து அனைவரையும் கை கூப்பி கும்மிடும் அளவுக்கு தெய்வீக முகத்துடன் காட்சி அளித்திருந்தார். இந்த திரைப்படத்தை அடுத்து அம்மன் வேடம் என்றாலே அது ரம்யா கிருஷ்ணன் தான் என்ற நிலை ஏற்பட்டு பல படங்களில் அம்மனாக நடித்திருந்தார்.

மிரட்டிய நீலாம்பரி

மிரட்டிய நீலாம்பரி

ரஜினிகாந்துடன் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக மிரட்டி இருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் 275 நாட்களுக்கு மேல் ஓடியது. நீலாம்பரி என்னும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்த விதம் அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது. ஆணவத்தின் மொத்த உருவமாக அந்தப் படத்தில் வெளிப்பட்டிருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று அனைவரும் அவரை கொண்டாடினர்.

போட்டுத்தாக்கு

போட்டுத்தாக்கு

இதையடுத்து, பாட்டாளி, பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்ச தந்திரம், ஜூலி கணபதி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.மேலும், குறும்பு, குத்து,காக்க காக்க ஆகிய படங்களில் ஒரு படலுக்கு மட்டும் வந்து சிறப்பாக ஆடினார். குத்து திரைப்படத்தில் சிம்புவிடன் இவர் ஆடிய ஆட்டம் அனைவரையும் போட்டுத் தாக்கியது என்றே கூறலாம்.

ராஜமாதா சிவகாசி

ராஜமாதா சிவகாசி

உலக அளவில் அனைவரும் பிரம்மிக்க வைத்த திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் அட்டகாசப்படுத்தி இருந்தார். அன்பு வீரம், கருணை,கம்பீரம் என எந்த ஆங்கிளில் பார்த்தாலும் இவரின் நடிப்பு மிளிர்ந்தது. அவரின் நடிப்பை உலகமே நிமிர்ந்து பார்த்து பாராட்டியது என்று சொல்லலாம்.

இன்று பிறந்தநாள்

இன்று பிறந்தநாள்

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது, சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்று அனைவரின் மனதிலும் நினைத்து இருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X