நயன்தாரா கேரக்டர் பற்றி ஓப்பனாக சொன்ன சரண்யா பொன்வண்ணன்.. இத பத்தி தெரியாம போச்சே!

சென்னை : நயன்தாரா கேரக்டர் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை ஓபன் ஆக பேசியுள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

நாயகன் படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கலக்கி வரும் சரண்யா

கலக்கி வரும் சரண்யா

நாயகன் படத்தில் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஆண்டு கொண்டிருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். மணிரத்னம் இயக்கி கமல்ஹாசனுடன் இவர் நடித்த நாயகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. அதிலிருந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் சரண்யா.அன்று முதல் இன்று வரை தனது ரசிகர் பட்டாளத்தை அப்படியே வைத்துள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வெளுத்து வாங்கி வருகிறார். கிராமத்து கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஸ்டைலிஷான அம்மாவாக இருந்தாலும் சரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடிக்கக் கூடியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். முன்னணி நடிகர்களுக்கு அம்மா என்று சொன்னாலே இவர் பெயர் நினைவுக்கு வரும் அளவிற்கு தனது பெயரை ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

நயன்தாரா கேரக்டர்

நயன்தாரா கேரக்டர்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வந்தாலும் நடிகை நயன்தாராவுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ரசிகர்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல முயற்சிகளையும் எடுத்து கச்சிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

பல காதல்கள்

பல காதல்கள்

சினிமா பிரபலங்களை பொருத்தவரை எந்த அளவிற்கு பிரபலங்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதுபோல் அதிக கிசுகிசுக்களில் சிக்கியவர் நடிகை நயன்தாரா என்று சொன்னால் அது மிகையாகாது. இவரை சுற்றி பல காதல் கதைகளும் காதல்தோல்வி கதைகளும், அதிகமாக கிசுகிசுக்கப்பட்டது.இதுமட்டுமில்லாமல், தன்னைப் பற்றி பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் வெளிவருகிறது என்று புரிந்த நயன்தாரா தன்னை ரிசர்வட் டைப் என்று சொல்லுமளவிற்கு தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டார்.

சரண்யா பகிர்ந்த உண்மைகள்

சரண்யா பகிர்ந்த உண்மைகள்

நயன்தாரா மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் இணைந்து , கோலமாவு கோகிலா, இது கதிர்வேலனின் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளனர். நயன்தாரா பற்றி நன்கு புரிந்து கொண்ட நடிகை சரண்யா பொன்வண்ணன் தற்போது நயன்தாராவை பற்றி சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சரண்யா பொன்வண்ணன் கூறியதாவது நயன்தாரா ஒருவரிடத்தில் பேசவில்லை என்றால் அல்லது ஒதுங்கி போகிறார் என்றால் கண்டிப்பாக அந்த நபர் மிகவும் மோசமானவராகத்தான் இருக்க முடியும், நயன்தாரா எப்பொழுதும் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவர், பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி போவதாலே பலரும் இவரை ரிசர்வட் டைப் என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. அவர் பிரச்சினையை வெறுக்கக் கூடியவர் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது இல்லை. தவறானவர்களிடத்தில் பேசி பழகுவதை விட விலகுவதே மேல் என்று ஒதுங்கிக் கொள்பவர் நயன்தாரா, என்று நயன்தாராவை பற்றி நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.

Recommended Video

Nayanthara Wedding | Red Saree-யில் ஜொலிக்கும் Nayanthara *Celebrity | Filmibeat Tamil
நயன்தாரா திருமணம்

நயன்தாரா திருமணம்

எப்பொழுது நயன்தாரா திருமணம் செய்துகொள்வார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் முக்கிய சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. நயன்தாராவுக்கு திருமணமான சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்கள், நடிகை சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்த இந்த சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X