டி.வி. நடிகருடன் திருமணம் நடக்கவில்லை-சீதா மறுப்பு

By Chakra

Seetha
டிவி நடிகர் சதீஷை நான் ரகசியமாக மணந்து கொண்டதாக வெளியான செய்தி தவறு என்று நடிகை சீதா திடீரென பல்டி அடித்துள்ளார்.

ஆண்பாவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆந்திராவைச் சேர்ந்த சீதா, தமிழ்-தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.

20 வருடங்களுக்கு முன் பார்த்திபனின் புதிய பாதை படத்தில் கதாநாயகியாக நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு சீதாவி்ன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா ஆகிய மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். ஆனால், சீதாவுக்கும், பார்த்திபன் இடையே பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

சீதாவுடன் மகள் அபிநயா இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், ராதாகிருஷ்ணனும் பார்த்திபனுடன் வசிக்கின்றனர்.

இந நிலையில் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் சீதா. அப்போது சீதாவுக்கும், டி.வி நடிகர் சதீசுக்கும் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந் நிலையில் சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சீதாவின் வீட்டில், அவரது பெற்றோர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ரகசியத் திருமணம் நடக்கவில்லை என்று சீதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து சீதா கூறுகையில், சதீஷும் நானும் காதலிப்பது உண்மை. யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவல் பொய்யானது. சதீஷுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. அவருக்கு விவாகரத்து கிடைத்ததும் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியுள்ளார் சீதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X