குடிகாரிகள் என்பதா...: 'சந்திரா' பட விழாவில் சனா கான் மீது ஸ்ரேயாவும் பாய்ச்சல்!

By Shankar

"வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் சந்திரா' என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா, நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்ப்ரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:- ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டு, இப்போது கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே... அது பற்றி...

பதில்: சந்திரா' படத்தில் கதைதான் கதாநாயகன். கதையும், என் கேரக்டரும் பிடித்துவிட்டால் எனக்கு ஹீரோ யார் என்பது பற்றி கவலை இல்லை.

கேள்வி: சந்திராவில் இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இளவரசி மேக்கப் போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் உள்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள். சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருக்கலாம்...

சனாகானுக்கு கண்டனம்

கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனாகான் அப்படி சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்களை பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களை பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.

கேள்வி:- ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாகக் கூறப்பட்டதே... என்ன ஆயிற்று?

பதில்: அந்த தகவல் உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் 'மிட் நைட் சில்ரன்' என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.

பின்னர் சந்திரா படம் குறித்து அதில் நடித்துள்ள விவேக், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் பேசினர்.

இயக்குநர் ரூபா ஐயர், படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிராஜகோபால், பிரசாத், இசையமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X