பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்திபனை பிரிந்ததற்கான அந்தக் காரணத்தை வெளிப்படையாக கூறிய சீதா

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் படங்கள் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சீதா.

படங்கள் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை சீதாவின் முதல் கணவரும் இயக்குநருமான பார்த்திபனுக்கும் தனக்கும் எதனால் விவாகரத்து ஆனது என்று முதன் முறையாக மீடியாவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

1985-ல் அறிமுகம்

1985-ல் அறிமுகம்

ஆண்பாவம் திரைப்படத்திற்கு நடிகர் நடிகைகள் தேர்வு நடத்திக் கொண்டிருந்தபோது நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு நபர் கல்யாண வீட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை இயக்குநர் பாண்டியராஜனிடம் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் பந்தியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சீதாவை பார்த்து ஆண்பாவம் திரைப்படத்திற்கு இந்தப் பெண் தான் கதாநாயகியாக சரியாக இருப்பார் என்று தேடி கண்டுபிடித்து அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருப்பார். ஷூட்டிங் முழுக்க பாண்டியராஜனிடம் எரிச்சலாகத்தான் பேசுவாராம். ஆனால் படம் வெளிவந்த பிறகு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மன்னிப்பு கேட்டாராம்.

புதிய பாதை

புதிய பாதை

நடிப்பதற்கு ஆர்வமே இல்லாமல் இருந்த சீதாவிற்கு ஆண்பாவம் திரைப்படம் மூலம் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தார் பாண்டியராஜன். அதன் பின்னர் புதிய பாதை திரைப்படத்தின் மூலமாக தான் அறிய புகழை சீதா சம்பாதித்தார் என்றே கூறலாம்.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

புதியபாதை திரைப்படத்தில் பணிபுரியும் போதே பார்த்திபன் அவர்களுக்கும் சீதாவிற்கும் காதல் மலர அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சினிமா ஜோடிகளில் மிக முக்கியமாக கருதப்பட்டவர்கள் சீதா மற்றும் பார்த்திபன். ஆனால் திடீரென்று விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சியளித்தனர். அதன் பிறகு 2010-ஆம் வருடம் சதீஷ் என்கிற டெலிவிஷன் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து அவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் சீதா. இன்னொரு பக்கம் நடிகர் பார்த்திபன் யாரையும் திருமணம் செய்யாமல் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

பிரிந்ததற்கு காரணம்

பிரிந்ததற்கு காரணம்

சமீபத்தில் கூட அவர்களுக்கு பிறந்த ஒரு பெண்ணின் திருமணத்தை இருவரும் நடத்தி வைத்தார்கள். தற்சமயம் சீதா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் வரும் அருக்காணி கதாபாத்திரம் போல் ஒன்றும் தெரியாதவளாகத்தான் நான் வளர்ந்தேன். என்னிடம் இருந்தது எதிர்பார்ப்பு மட்டுமே. எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு. அது பூர்த்தி ஆகாததால் தான் விவாகரத்தை பெற்றேன் என்று சீதா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X