புது இயக்குநர் ரவிக்குமாருடன் நடிகை சுஜிபாலா நிச்சயதார்த்தம் - ஷகீலா, அல்போன்சா வாழ்த்து!

தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சுஜிபாலா.
இந்த படத்தை ரவிக்குமார் என்பவர் இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சுஜிபாலாவின் பெற்றோரிடம் ரவிக்குமார் தங்கள் காதலைத் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார். சுஜிபாலாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மாலை நாகர்கோவில் கொய்யன் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் சுஜிபாலா - ரவிக்குமார் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகைகள் ஷகீலா, அல்போன்சா, கும்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதுபற்றி சுஜிபாலா கூறுகையில், "தற்போது நான் உண்மை மற்றும் விஷாலுடன் ஒரு படம் என சில படங்களில் நடித்து வருகிறேன். ரவிக்குமார் என்னை காதலித்தார். திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். நான் எனது பெற்றோரின் சம்மதத்தை பெறுமாறு கூறினேன். அவரும் எனது பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். நேற்று எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணம் நடக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











