For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகைகளின் அப்பாக்கள் நடிகைகளின் அப்பாக்கள் மாதிரி பாவப்பட்ட ஜென்மங்களைப் பார்க்கவே முேடியாது. பல நடிகைகள் தங்கள் குடும்பம் என்றுஅம்மா, சதோதர, சகோதரிகளைத் தான் அறிமுகப்படுத்துவார்களே தவிர அப்பாவைக் கண்ணிலேயே காட்ட மாட்டார்கள்.இந் நிலையில் முன்னணி தமிழ் நடிகைகளின் அப்பாக்கள் பற்றிய சின்ன டிட்-பிட்:*

  By Staff
  |

  நடிகைகளின் அப்பாக்கள் மாதிரி பாவப்பட்ட ஜென்மங்களைப் பார்க்கவே முேடியாது. பல நடிகைகள் தங்கள் குடும்பம் என்றுஅம்மா, சதோதர, சகோதரிகளைத் தான் அறிமுகப்படுத்துவார்களே தவிர அப்பாவைக் கண்ணிலேயே காட்ட மாட்டார்கள்.

  இந் நிலையில் முன்னணி தமிழ் நடிகைகளின் அப்பாக்கள் பற்றிய சின்ன டிட்-பிட்:

  *நயனதாராவின் அப்பா குரியன் (கொரியன் அல்ல) ஏர்போர்சில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பெரும்பாலும்கேரளாவிலேயே வாசம் செய்யும் இவர், எப்போதாவது சென்னை, ஹைதராபாத் பக்கம் (நயனதாரா வசிப்பிடங்கள்) எட்டிப்பார்ப்பார்.

  * நடிகை ஆசினின் அப்பா ஜோசப் சிபிஐயில் வேலை பார்த்தவராம். ஏகப்பட்ட நில, புலங்கள், ரப்பர் எஸ்டேட்டுகளைக்கொண்டவர். அதையும் கவனித்துக் கொண்டு மகளுக்கும் துணையாக சூட்டிங்கிற்கும் வந்து போகிறார்.

  * கோபிகாவின் அப்பா ஆண்டோ பிரான்சிஸ் பாலக்கட்டில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இப்போது மகளின் கால்ஷீட்டைகவனித்து உதவுகிறார்.

  * சந்தியாவின் அப்பா சென்னையில் வங்கியொன்றில் மேனேஜராக உள்ளார்.

  * நவ்யா நாயரின் அப்பா ராஜு கேரள மாநிலம் ஆழப்புலாவில் பிஎஸ்என்எல் அதிகாரியாக உள்ளார்.

  * ரேணுகா மேனனின் அப்பா உன்னி கிருஷ்ண மேனன் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்.

  * பிரணதியின் அப்பா ஜோசப் மலையாளப் படங்களில் நடிக்கிறார்.

  * ஸ்ரீதேவிகாவின் அப்பா சேதுமாதவன் பாலக்காட்டில் இறால் பண்ணை வைத்திருக்கிறார்.மேலே சொன்ன அனைவரும் கேரளத்தைச் சேர்ந்த நடிகைகள்.

  * த்ரிஷாவின் அப்பா கிருஷ்ணன், சென்னை பென்ஸ் பார்க் ஹோட்டலில் மேனேஜராக உள்ளார். மனைவி, மகளுடன் வசிக்காமல்தனியாக பிரண்சுடன் வசிக்கிறார். இவரும் பாலக்காட்டைச் சேர்ந்தவர் தான். த்ரிஷாவின் அம்மா திருநெல்வேலிக்காரர்.

  * ஸ்னேகாவின் தந்தை ராஜாராம் துபாயில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியாற்றியவர். இப்போது சென்னையில் சின்ன பிஸினஸ்செய்கிறார்.

  * மீனாவின் அப்பா துரைராஜ் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் மல்லிகா சினிமா துணை நடிகையாகஇருந்தவர். காங்கிரஸ் மகளிரணியில் இருந்தவர்.

  * சதாவின் அப்பா ஒரு ஆயுர்வேத டாக்டர்

  * நமிதாவின் அப்பா குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளி வியாபாரம் செய்கிறார்

  * பூஜாவின் அப்பா உமாசங்கர் வால்பாறையில் உள்ள இந்துஸ்தான் லீவர் லிமிட்டெடின் டீ எஸ்டேட்டில் ஜெனரல் மேனேஜர்.

  * லட்சுமி ராயின் தந்தை கர்நாடக மாநிலம் பெல்காமில் ஒயின் ஷாப்புகள் வைத்து நடத்தி வருகிறார்.

  * சங்கவியின் அப்பா ரமேஷ் மைசூர் அரசு மருத்துவமனையில் இ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்.

  * விந்தியாவின் அப்பா யோகானந்த் திருப்பதியில் நில புலன்களை கவனித்து வருகிறார்.

  * ப்ரியாமணியின் தந்தை வாசுதேவ மணி ஆட்டோ பார்ட்ஸ் தயாரிக்கும் யூனிட் வைத்துள்ளார்.

  * தியாவின் அப்பா சஞ்சீவ் சர்மா, எச்எம்டியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

  * மதுமிதாவின் அப்பா நாயுடு ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியர்.

  * கெளசல்யாவின் அப்பா சிவசங்கர் கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் சீப் என்ஜினியர்.

  Read more about: actresses and fathers
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X