twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Flashback.. "அடிக்கிது குளிரு" … ரஜினியையும் பாடகராக்கிய இளையராஜா!

    |

    சென்னை : மன்னன் திரைப்படத்தில் வரும் அடிக்கிது குளிரு...துடிக்கிது தளிரு இந்த பாடலைப்பற்றி உங்களுக்கு நிறைய தெரியும்.. அதன் சுவாரஸ்ய பின்னணியை இப்போது பார்ப்போம்.

    இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் மன்னன். 1992ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.

    தனுஷ் பட வில்லன் நடிகரின் மகனுக்கு முதல் பிறந்தநாள்… வைரலாகும் புகைப்படம் !தனுஷ் பட வில்லன் நடிகரின் மகனுக்கு முதல் பிறந்தநாள்… வைரலாகும் புகைப்படம் !

    இதில், ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, கவுண்டமணி, விசு ஆகியோர் நடித்திருந்தனர்.

    அடிக்குது குளிரு

    அடிக்குது குளிரு

    அடிக்குது குளிரு... துடிக்கிது தளிரு... மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை வாலி அழகான வரிகளில் எழுதி இருப்பார். மிட்நைட் மசாலா பாணியில் இருக்கும் இந்த பாடல் வெற்றி பெற்ற பாடலில் ஒன்றாகும். இதில் ரஜினிகாந்துக்கு ஏற்றவாரு பல வரிகளை பாடலில் லாவகமாக சேர்த்து இருப்பார் வாலி.

    சினுங்கல்

    சினுங்கல்

    ஜானகியின் மெல்லிக்குரலில் அமுத தேன் ஊற்று போல இந்த பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. இடை இடையே ஜானகியின் சினுங்கலும்...முனுங்களும் பாட்டுக்கு மேலும் வலு சேர்த்தன. ரஜினியின் கனத்த குரலில் அவருக்கே உரித்தான ஸ்டைலில் இத பார்ரா... இது எப்படி இருக்கு என்பவையும் பாடலை மேலும் மெறுகேற்றி உள்ளன.

    அசாதாரணமான ஒன்று

    அசாதாரணமான ஒன்று

    இளையராஜாவை நாம் தலைமையில் தூக்கி வைத்து கொண்டாட இந்த பாடலை ஓர் உதாரணமாக சொல்லாம். அந்த ஆறு வரிகளை மட்டும் ரஜினியை பாட வைக்க இளையராஜா எடுத்த முயற்சிகள் அசாதாரணமான ஒன்று, அதற்காக எத்தனை மெனக்கெட்டு இருப்பார் இளையராஜா.

    Recommended Video

    Ajith Shalini Recent romantic SELFIE | Thala Ajith, Valimai Update
    6மணி நேரம் ஆச்சு

    6மணி நேரம் ஆச்சு

    முதன் முறையாக என்ன பாட சொன்னப்போ வேண்டாம் சார் என்றேன், அட பாடுங்க என்றார் இளையராஜா, நான் பாடுனது என்னமோ ஆறு வரிதான் ஆனால், அத ரெகார்ட் பண்ணி முடிக்க 6மணி நேரம் ஆச்சுனு ஒரு நிகழ்ச்சியில் ரஜினி கூறியிருந்தார்.

    அடிக்கிது குளிரு

    அடிக்கிது குளிரு

    இந்த பாடல் என்னமோ முதலிரவு பாடல் தான், ஆனால் கேட்கும் போதோ பார்க்கும் போதே முகம் சுலிக்க வைக்கவில்லை. அவ்வளவு இனிமையான பாடல்,இளையராஜா இசை, வாலியின் பாடல் வரி, ஜானகியின் குரல் என இந்த பாடல் என இன்று வரை அனைவரும் விரும்பும்பாடலாக உள்ளது.

    English summary
    Adikuthu Kuliru Song Flashback
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X