டோரண்டோ விழா-பத்மப்ரியா படம்!
டோரண்டோ திரைப்பட விழாவில் பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுகள் படம் திரையிடப்படவுள்ளது.
பிரபல மலையாள இயக்குநர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் அடூர். தூர்தர்ஷன்தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இப்படம் தற்போது டோரண்டோவில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்கிறது. செப்டம்பர் 1ம் தேதி அடூரின் படம் திரையிடப்படுகிறது.
இப்படத்தில் காவ்யா மாதவன், நந்திதா போஸ், பத்மப்ரியா, கீது மோகன்தாஸ், மஞ்சு பிள்ளை, ரம்யா நம்பீசன், முகேஷ், மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் அக்டோபரில் கேரளத் திரைகளை ஆக்கிரமிக்க உள்ளது.
More from Filmibeat
adoor அடூர் இயக்குநர் கனடா டோரண்டோ தகழி சிவசங்கரன் திரைப்பட விழா தூர்தர்ஷன் நந்திதா தாஸ் பத்மப்ரியா canada director doordharsan film festival nandita doss padmapriya thagali sivasankaran toronto


Click it and Unblock the Notifications











