இந்தியில் மெகா ஹிட்டான பந்தா பரமசிவம்... மீண்டும் தமிழில் 'ரீமேக்க' கடும் கிராக்கி!
2003-ம் ஆண்டு தமிழில் பிரபு, ரம்பா, மோனிகா, கலாபவன் மணி, அப்பாஸ் என பெரும் நடிகர் பட்டாளமே நடிக்க, டிபி கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் பந்தா பரமசிவம்.
சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஓரளவு லாபம் கொடுத்த படம் இது. விஜய்யின் மேனேஜரும் பிஆர்ஓவுமான பிடி செல்வகுமார்தான் இதன் தயாரிப்பாளர்.
இந்தப் படம்தான் இப்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 என ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடுகிறது. நூறுகோடி வசூலையும் எட்டி வருகிறது.
இதில் அக்ஷய்குமார், ஜான் ஆபிரகாம், ரிதேஷ் தேஷ்முக், அசின் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை மீண்டும் தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பந்தா பரமசிவம் படத்தின் கதை உரிமையை தங்களுக்குத் தருமாறு தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமாரிடம் கதை உரிமை கேட்டு தயாரிப்பாளர்கள் பலர் மொய்க்கிறார்களாம்.
இதில் நடிக்க விஷால், ஆர்யா, ஜீவா என முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











