பலாத்கார காட்சிக்காகவே படைக்கப்பட்டவரா துஷாரா விஜயன்?.. தனுஷை தொடர்ந்து ரஜினி படத்திலும் அதே கொடுமை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை நடிகை துஷாரா விஜயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தனுஷின் ராயன் படத்தில் தங்கையாக நடித்திருந்தார் துஷாரா விஜயன். அந்த படத்திலும் அவருக்கு வலிமையான கதாபாத்திரம் எழுதப்பட்டு இருந்தது.

வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட நடிகைகளை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். அவரை சுற்றித்தான் மொத்த படமே என்று கூட சொல்லலாம்.

vettaiyan dushara vijayan raayan

ஆனால், ராயன் படத்தில் அவருக்கு நேர்ந்த அதே கொடுமை அதை விட மோசமாக வேட்டையன் படத்தில் காட்டப்பட்டு இருப்பது துஷாரா விஜயான் டைப் காஸ்டிங் செய்யப்படுகிறாரோ தமிழ் சினிமாவில் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

உலக சினிமா வழக்கம்: ஒரு படத்தில் வில்லனாக பிரபலமாகி விட்டால் தொடர்ந்து நம்பியார் போல அவரை பல படங்களில் வில்லனாக நடிக்க வைப்பது உலக வழக்கம் தான். ஆனால், அதையும் தாண்டி தொடர்ந்து ஒரு நடிகரை கொலைகாரனாகவே நடிக்க வைப்பது, பலாத்காரம் செய்யும் நபராக நடிக்க வைப்பது, விபச்சாரியாக நடிகைகளை நடிக்க வைப்பது போன்ற டைப் காஸ்டிங் விஷயங்களை இயக்குநர்கள் செய்யக் கூடாது என சில நடிகர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

vettaiyan dushara vijayan raayan

மகாராஜா பட நடிகர் வருத்தம்: ராட்சசன், மகாராஜா படங்களில் நடித்த நடிகர் வினோத் சாகர் தொடர்ந்து தன்னை காமக் கொடூரனாகவே தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கின்றனர் என்றும் மலையாளத்தில் தனக்கு வேறு விதமான கதாபாத்திரங்களை வழங்கி வருகின்றனர் என்றும் மகாராஜா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

கொட்டுக்காளி நடிகை கதறல்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கிய சூரி நடித்த கொட்டுக்காளி படத்தில் மலையாள நடிகை அன்னா பென்னை வைத்து கிளைமேக்ஸ் காட்சியை எடுக்காமல் முல்லையரசி எனும் டஸ்க்கி டோன் கொண்ட தமிழ் பெண்ணை அந்த மருந்தெடுக்கும் காட்சியில் நடிக்க வைத்திருந்தனர். பலாத்கார காட்சிகளிலும் இதுபோன்ற அப்யூஸ் செய்யும் காட்சிகளிலும் தான் என்னை நடிக்க கூப்பிடுகின்றனர் என புலம்பித் தீர்த்து இருந்தார்.

vettaiyan dushara vijayan raayan

ராயன் படத்திலும் பலாத்காரம்: அதே போலத்தான் தற்போது நடிகை துஷாரா விஜயனையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்க என அழைத்து வந்து அவரை பலாத்காரம் செய்யும் காட்சியில் நடிக்க வைத்து வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது. திறமையான நடிகையான துஷாரா விஜயனை தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் பலாத்காரம் செய்து விடுவார்கள். அதற்கு அவரும் அவரது அண்ணன் தனுஷும் பழிவாங்குவது போல கதை செல்லும்.

vettaiyan dushara vijayan raayan

வேட்டையன் படத்திலும் அதே கொடுமை: கலர் அடிச்ச தலை, குப்பத்தில் இருக்கும் இளைஞனை தப்பாக சொல்லக் கூடாது என்பதை உணர்த்திய இயக்குநர் ஞானவேல் துஷாரா விஜயனை பலாத்கார காட்சியில் நடிக்க வைத்ததும் அந்த காட்சியை ரொம்பவே வல்கராக குழந்தைகள் பார்க்க முடியாத அளவுக்கு காட்சிப்படுத்திய விதமும் திரும்ப திரும்ப படத்தில் அந்த காட்சியை காட்டியது ஏன்? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். துஷாரா விஜயன் என்ன பலாத்கார காட்சியில் நடிக்கவே படைக்கப்பட்டவரா? என்றும் அவரை தொடர்ந்து இயக்குநர்கள் டைப் காஸ்ட் செய்யக் கூடாது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X