»   »  ஐஸ்வர்யாவுக்கு நாக தோஷ பூஜை

ஐஸ்வர்யாவுக்கு நாக தோஷ பூஜை

Subscribe to Oneindia Tamil

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்த ஊரான செந்தடி என்ற கிராமதில் நாகதோஷ நிவர்த்திக்கான பூஜையை ஐஸ்வர்யாவின் பெற்றோர் நடத்தினர்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் திருமன நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இன்னும் திருமணதேதியை அறிவிக்கவில்லை.

இவர்களது திருமணத்திற்கு பல்வேறு தோஷங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியதால், ஐஸும், அபிஷேக்கும்பல்வேறு கோவில்களுக்கும் சென்று பூஜைகள், தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் ஐஸ்வர்யா ராயின் பெற்றோர் தங்களது சொந்த ஊ>ல் நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராயின் பிறந்த ஊர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செந்தடி கிராமம். இங்கு ஒருநாகதேவதை கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு ஐஸ்வர்யா ராயின் தந்தை ராஜேந்திர ராயும், தாயார்விருந்தாவும் வந்து நாக தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இந்தப் பூஜையில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். துளு பாரம்பரியப்படி பூஜை நடந்ததாககூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவுக்கு ஐஸின் தந்தை மற்றும் தாயார் ஆகியோர் சென்றுதர்மஸ்தாலா தலைவரான வீரேந்தர ஹெக்கடயை சந்தித்துப் பேசினர். தர்மஸ்தாலா கோவிலிலும் அவர்கள்சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

கன்னட துளு மொழி பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரைஎன்பதே சரியான பெயராகும். ஆனால், அது ராய் ஆகிவிட்டது.

(நம் ஊர் நடிகர் பிரகாஷ் ராஜ், லட்சுமி ராய் ஆகியோரும் கூட இதே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். பிரகாஷ்ரை, லட்சுமி ரை தான் சரியான பெயர். பிரகாஷ் ராஜ் என்று பெயரை மாற்றியது இயக்குனர் பாலசந்தர்)

Read more about: spl poojas for aishwarya rai
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil