விவேக் ஓபராயின் கரம் பிடிக்கிறார் ஐஸ்வர்யாராய் ஐஸ்வர்யாராய்க்கும், விவேக் ஓபராய்க்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதை விவேக் ஓபராயே கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் முதன் முதலில் சல்மான் கானின் காதல் வலையில் தான் வீழ்ந்தார். இடையில் என்னநடந்ததோ, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.இதன் பிறகு நடிகர் விவேக் ஓபராயின் காதல் வலையில் ஐஸ்வர்யா ராய் சிக்கினார். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருவரும்தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவரும் காதலித்து வருவது அனைவருக்குமே தெரிந்த போதிலும், அது கல்யாணத்தில்முடியுமா, அல்லது முதல் காதல் போல இதிலும் ஐஸ்வர்யாராய்க்கு தோல்வியே மிஞ்சுமா என்ற குழப்பம் இதுவரை நீடித்துவந்தது.அதற்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது. ஐஸ்வர்யாராயை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக விவேக்ஓபராயே அறிவித்து பலரது சந்தேகத்திற்கும் விடை கொடுத்துவிட்டார். ஆஜ்தக் டிவிக்கு விவேக் ஓபராய் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராயை விரைவில் திருமணம் செய்யப் போவதாகதெரிவித்துள்ளார். எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் 2 வருடங்களுக்கு முன் காதல் ஏற்பட்டது.அப்போதே இந்தக் காதல் நீண்ட நாளுக்கு நீடிக்காது என்று பலரும் கூறினார்கள். ஆனால் இப்போதும் நாங்கள் ஒன்றாகத் தான்இருக்கிறோம். எங்களுக்குள் இதுவரை எந்தக் கருத்துவேறுபாடும் ஏற்பட்டதில்லை.ஐஸ்வர்யாராய் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வாழ்க்கையிலேயே இணைவது என்றால் கேட்கவா வேண்டும். எங்களது திருமணம் விரைவில் நடைபெறும்.ஐஸ்வர்யாராய் உலக அழகிப் பட்டத்தை வென்றிருந்தாலும், உலகிலேயே அழகான பெண்ணாக நான் கருதுவது எனது தாயைத்தான். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மதுபாலா. 3வது இடம் வேண்டுமென்றால் ஐஸ்வர்யாராய்க்கு கொடுக்கலாம் என்றுகூறினார் ஓபராய்.
பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் முதன் முதலில் சல்மான் கானின் காதல் வலையில் தான் வீழ்ந்தார். இடையில் என்னநடந்ததோ, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதன் பிறகு நடிகர் விவேக் ஓபராயின் காதல் வலையில் ஐஸ்வர்யா ராய் சிக்கினார். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருவரும்தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவரும் காதலித்து வருவது அனைவருக்குமே தெரிந்த போதிலும், அது கல்யாணத்தில்முடியுமா, அல்லது முதல் காதல் போல இதிலும் ஐஸ்வர்யாராய்க்கு தோல்வியே மிஞ்சுமா என்ற குழப்பம் இதுவரை நீடித்துவந்தது.
அதற்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது. ஐஸ்வர்யாராயை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக விவேக்ஓபராயே அறிவித்து பலரது சந்தேகத்திற்கும் விடை கொடுத்துவிட்டார்.
ஆஜ்தக் டிவிக்கு விவேக் ஓபராய் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராயை விரைவில் திருமணம் செய்யப் போவதாகதெரிவித்துள்ளார். எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் 2 வருடங்களுக்கு முன் காதல் ஏற்பட்டது.
அப்போதே இந்தக் காதல் நீண்ட நாளுக்கு நீடிக்காது என்று பலரும் கூறினார்கள். ஆனால் இப்போதும் நாங்கள் ஒன்றாகத் தான்இருக்கிறோம். எங்களுக்குள் இதுவரை எந்தக் கருத்துவேறுபாடும் ஏற்பட்டதில்லை.
ஐஸ்வர்யாராய் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வாழ்க்கையிலேயே இணைவது என்றால் கேட்கவா வேண்டும். எங்களது திருமணம் விரைவில் நடைபெறும்.
ஐஸ்வர்யாராய் உலக அழகிப் பட்டத்தை வென்றிருந்தாலும், உலகிலேயே அழகான பெண்ணாக நான் கருதுவது எனது தாயைத்தான். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மதுபாலா. 3வது இடம் வேண்டுமென்றால் ஐஸ்வர்யாராய்க்கு கொடுக்கலாம் என்றுகூறினார் ஓபராய்.


Click it and Unblock the Notifications