»   »  ஐஸுக்கு ஆச்சா கல்யாணம்?

ஐஸுக்கு ஆச்சா கல்யாணம்?

Subscribe to Oneindia Tamil

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்து தொடர்ந்து மர்மம் நிலவி வரும்சூழ்நிலையில் அமிதாப் பச்சன் குடும்பத்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் காசியில்சாமி கும்பிட்டுள்ளார். அத்தோடு இருவரும் மாலையும், கழுத்துமாக வந்ததால்,இருவருக்கும் காசியில் வைத்து கல்யாணம் ஆகி விட்டதோ என்ற சந்தேகம்கிளம்பியுள்ளது.

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் தீவிரமாக காதலித்து வருவதாக முன்பு செய்திகள்வெளியாகின. இப்போது அவர்களது கல்யாணம் குறித்த சர்ச்சைகள் சூடாககிளம்பியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாணம் செய்துவிட்டார்கள், ஜாகதத்தில் சிக்கல் அதனால் கல்யாணம் நடக்காது, அமிதாப்பச்சன்குடும்பத்தில் எதிர்ப்பு தோன்றியுள்ளது என சகட்டுமேனிக்கு செய்திகள் வெளியாகிவருகின்றன.

வழக்கம்போல இந்த செய்திகள் எதற்குமே ஐஸ்வர்யா பதில் அளிக்காமல் உள்ளார்.இருப்பினும் அவரும், அபிஷேக்கும் படு நெருக்கமாகத்தான் பழகி வருகிறார்கள்.ஜோடி போட்டு பல இடங்களுக்கும் சுற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராயும் இணைந்துகாசியில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுள்ளார். இன்று அதிகாலை அமிதாப்,மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மகள் ஷ்வேதா, தம்பி அஜிதாப் பச்சன்,அவரது மகள் நம்ரதா, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் உள்ளிட்டோருடன்ஐஸும் வாரணாசி வந்தார்.

அங்கிருந்து அனைவரும் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சங்கத் மோச்சான்கோவில்களில் நடந்த விசேஷ பூஜையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

அமிதாப் குடும்பத்துடன் ஐஸ்வர்யா முதன் முதலாக வெளியுலகுக்கு வந்துள்ளதால்அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. பத்திரிக்கையாளர்களும் அதிக அளவில்கூடியதால் அங்கு பெரும் பரபரப்பாகி விட்டது.

அங்குள்ள ஜானகி கோவில், அனுமன் கோவில் ஆகிய கோவில்களில் நடந்தபூஜையிலும் அமிதாப் குடும்பம் மற்றும் ஐஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.அமிதாப் பச்சனும், மனைவி ஜெயாவும் தனியாக ஜல பூஜையும் செய்தனர்.

ஐஸ்வர்யா ராயின் ஜாகதத்தில் சில தோஷங்கள் வரவிருப்பதாக அமிதாப் பச்சன்குடும்ப ஜோதிடர் சந்திரமெளலி உபாத்யாயா கூறியதால்தான் இந்த தோஷ நிவர்த்திபூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாமி கும்பிட்ட பின்னர் வெளியேவந்தபோது அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் கழுத்தில் மாலை தொங்கியதால்,இருவருக்கும் கோவிலில் வைத்து கல்யாணம் முடிந்து விட்டதா என்ற சந்தேகம்கிளம்பியது.

ஆனால், அமிதாப்பின் தந்தைக்கு 99வது பிறந்த நாள் என்பதால் சிறப்புப் பூஜைசெய்ய வந்ததாகவும், அப்படியே ஐஸ்வர்யாவுக்கு செவ்வாய் தோஷ நிவர்த்தி செய்யவந்ததாகவும் அபிஷேக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பூஜைகளைச் செய்த கோவில் பூசாரி ஸ்ரீகாந்த் திரிபாதி கூறுகையில்,அமிதாப்பும், ஜெயா பச்சனும் ஜலாபிஷேகம் செய்தனர். அதேபோல அபிஷேகம்செய்யமாறு அபிஷேக் மற்றும் ஐஸ்வராயிடம் கூறினேன். அவர்களும் செய்தனர்.குடும்ப நலம் மற்றும் ஆரோக்கியத்துக்காக அவர்கள் பூஜைகள் செய்தனர் என்றார்.

இதற்கிடையே, தூம்-2 படத்தில் ரித்திக் ரோஷனுக்கு வாயோடு வாய் வைத்துஐஸ்வர்யா கொடுத்த முத்தத்தால் அவருக்கும் அபிஷேக்குக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதாக இடையில் ஒரு செய்தி கிளம்பியது. படத்தை அமிதாப் தனதுகுடும்பத்தோடு பார்த்தபோது, இந்த முத்தக் காட்சி அவர்களை அதிருப்தியில் ஆழ்த்திவிட்டதாம்.

இருப்பினும் ஒரு நடிகை என்ற முறையில்தான் ரோஷனுக்கு தான் முத்தம்கொடுத்ததாக அபிஷேக்கின் சகோதரி ஷ்வேதாவிடம் ஐஸ்வர்யா மனம் திறந்துகூறியுள்ளார். அவரும் ஐஸை ஆறுதல் படுத்தினாராம். அத்தோடு தனதுகுடும்பத்தினரிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து ஐஸ் மீதானஅதிருப்தியிலிருந்து அமிதாப் குடும்பம் வெளி வந்ததாம். இதைத் தொடர்ந்தே காசிகோவில் விசிட் என்கிறார்கள்.

எனவே, விரைவிலேயே ஐஸ் அபிஷேக் குறித்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி,அதாவது சுப முடிவு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil