»   »  ஐஸ்-அபிஷேக் பிப்-19ல் கல்யாணம்?

ஐஸ்-அபிஷேக் பிப்-19ல் கல்யாணம்?

Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 19ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகஅமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடரான சந்திரசேகர சுவாமிகள் கூறியுள்ளார்.

சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்த ஐஸ்வர்யா ராய் பின்னர் அவர்களை கைகழுவிவிட்டு அபிஷேக் பச்சனை காதலிக்கத் தொடங்கினார். இந்தக் காதல் கல்யாணத்தில் முடியும் எனஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இடையில் பல்வேறு வதந்திகள் கிளம்பின. காதல் முறிந்து விட்டது, மதுரையில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர், காசியில் கல்யாணம் ஆனது, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுகிறது, புளிய மரத்திற்குகல்யாணம் செய்தார் ஐஸ்வர்யா என சகட்டு மேனிக்கு தகவல்கள் கிளம்பின.

இதனால் ஐஸ், அபிஷேக் கல்யாணம் குறித்து பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் இவர்களதுகல்யாணம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளதாக ஐஸ்வர்யா ராயின் குடும்ப ஜோதிடரான சந்திரசேகரசுவாமிகள் கூறியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5ம் தேதி 32வயது பிறக்கிறது. அன்று முதல் அவருக்கு யோகம் பிறக்கிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்திருமணத்திற்கான தடைகள் நீங்கி விட்டன.

இவர்களது திருமணம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஹயாத் இன்டர்நேஷனல்ஹோட்டலில் நடைபெறும். 20ம் தேதி மும்பையிலும், 21ம் தேதி டெல்லியிலும் வரவேற்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்றார் சுவாமிகள்.

ஆனால் இதுகுறித்து அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் குடும்பத்திலிருந்து இதுவரை எந்தத் தகவலும்வெளியாகவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil