»   »  விந்தியவாசினி கோவிலில் ஐஸ்-அபிஷேக்

விந்தியவாசினி கோவிலில் ஐஸ்-அபிஷேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உ.பி. மாநிலம் மிர்ஸாபூரில் உள்ள பிரபல விந்தியவாசினி கோவிலில் நடிகர் அபிஷேக் பச்சனும், அவரைமணந்து கொள்ளப் பாகும் ஐஸ்வர்யா ராயும் வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.ஐஸ்வர்யாவுக்கு சிலதோஷங்கள் உள்ளதால் பல்வேறு கோவில்களுக்கும் இருவரும் ஜோடியாகப் போய்அர்ச்சனைகள், பரிகாரங்கள், சிறப்புப் பூஜைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமிதாப்பின் குடும்ப நண்பரும், சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங்கின்51வது பிறந்த நாள் விழா மிர்ஸாபூரில் நடந்தது. இதற்காக அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் வந்தார்.

வாரணாசியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மிர்ஸாபூர் வந்த அவர்கள் நேராக விந்தியவாசினி கோவிலுக்குச்சென்றனர்.அங்கு ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சிறப்பு பகவதி பூஜையை நடத்தினர். பின்னர் கோவிலில்வழங்கப்பட்ட குங்குமத்தை பெற்றுக் கொண்டனர்.

அந்தக் குங்குமத்தை ஐஸ்வர்யாவின் நெற்றியில் வைத்த அபிஷேக் தானும் வைத்துக் கொண்டார். பின்னர்கோவிலுக்கு தங்கக் கொடை, மூக்குத்தியை காணிக்கையாக கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது அமிதாப் குடும்பத்தினருக்காகவும், ஐஸ், அபி நலனுக்காகவும் 16 வகையான பூஜைகள்நடத்தப்பட்டதாம். அதன் பின்னர் அமர்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அமிதாப் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil